Перейти к содержимому

06 SeDiyAya valvinaigaL - kulaSEkara AzhwAr

Kinchit Dharmam

0:00 / 0:00

06 SeDiyAya valvinaigaL - kulaSEkara AzhwAr

14 400 просмотров · 4 года назад
Kinchit Dharmam
37,7 тыс. подписчиков
14 400 просмотров · 4 года назад
O VEnkaTavA, to thy doorstep we've come To sing kulaSEkara AzhwAr's pasuram To behold thy ruby - hued lips Do pardon our sins and slips நம்மை மலையேற வைக்கும் இசையோடு, மலையின் குளிர்ச்சியை உணர வைக்கும் காட்சியோடு, கோவிந்தனிடம் இருந்த குலசேகராழ்வாரின் பக்தியை அனுபவிக்க வைக்கும் குரலோடு, இந்த அழகிய பாடலை அனுபவிப்போம்! மலையேறி .. படியையடைந்து .. பவளவாய் காணும் அனுபவம் பெறுவோம்! செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே (பெ தி 4.9) (செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே ! ) தன் திருவடிகளைப் பற்றினவர்களுடைய, பாபத்தின் பலனான ஸம்ஸாரத் தொடர்பைப் போக்கியருள்கின்ற திருமாலே (ஸ்ரீயப் பதியான எம்பெருமானே) ! (நெடியானே ! ) தன்னை அண்டினவர்களைக் காப்பாற்றுவதில் எல்லை காணமுடியாதவனே ! (வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்) திருவேங்கடமுடையானே ! உன்னுடைய கோயிலின் வாசலிலே, (அடியாரும்) உன்னைத் தவிர வேறு எதையும் ஆசைப்படாத ஸ்ரீவைஷ்ணவர்களும், (வானவரும்) உன்னைவிட்டு மற்றவற்றை ஆசைப்படும் தேவர்களும், (அரம்பையரும்) பிறருக்கு அடிமைபூண்டுள்ள ரம்பை போன்ற தேவப்பெண்களும் (கிடந்து இயங்கும்) கூடித் திரிகின்ற (படியாய்க்கிடந்து) படியாகக் கிடந்து (உன் பவளவாய் காண்பேனே) உன்னுடைய பவளம் போன்ற திருவதரத்தைக் (திரு உதடுகளை) காணப் பெறுவேனாக வேண்டும்.