Перейти к содержимому

வித்யாரம்பம் சரஸ்வதி கோயில் சரஸ்வதி விளாகம் 19/10/2026

Rajaraman L

0:00 / 0:00

வித்யாரம்பம் சரஸ்வதி கோயில் சரஸ்வதி விளாகம் 19/10/2026

71 просмотр · 5 дн. назад
Rajaraman L
724 подписчика
71 просмотр · 5 дн. назад
💐சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம்.💐 🔱மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாகவும். உலகத்திலிலேயே சரஸ்தியின் பெயரால் சிவாலயம் இங்குமட்டுதான் உள்ளதாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வித்தையார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யட்டு. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஒத ஓதுவார்கள் சகலகலாவள்ளிமாலைபாராயணம் செய்யது. குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கபட்டது.கோவில் அர்ச்சகர் ஓம் என்கிற மந்திரத்தை குழந்தைகளின் நாவில் தேன்கொன்டு எழுதினார். விழா ஏற்பாட்டை கிராமமக்கள் மற்றும் கோயில் நிர்வாகி ராமலிங்கம் ராஜாராமன் செய்தனர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொன்டனர்.