சவூதியில் பங்களாதேஷ் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்#SaudiArabia #DeathSentence #BangladeshCouple
TamilPlus 24x7
0:00 / 0:00
சவூதியில் பங்களாதேஷ் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்#SaudiArabia #DeathSentence #BangladeshCouple
15 521 просмотр · 1 день назад
TamilPlus 24x7
13,3 тыс. подписчиков
15 521 просмотр · 1 день назад
சவூதியில் பங்களாதேஷ் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தகவல் மதம் மீது மதம் கொண்டிராத மனித நேயம் கொண்ட அனைத்து தரப்பினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேன்நிலவிற்காக உம்ரா பயணம் மேற்கொண்ட ஒரு தம்பத்தியினருக்கு நேர்ந்த மதவாத அரசாங்கத்தின் மூடத்தீர்மானத்தின் விளைவே இதுவாகும்.
நஸ்ரூல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவர் புதிதாக திருமணம் செய்துக்கொண்டவர்கள்.
தேன்நிலவிற்காக நேபாளம் செல்வோம் என மனைவியிடம் அன்பு கோரிக்கையினை முன்வைக்கின்றார் கணவர்.
எனினும் தமது முதலாவது பயணம் புனிதமான ஆன்மீக பயணமாக அமைய வேண்டும் என மனைவி அக்தர் கேட்டுக்கொள்கின்றார்.
அதற்கமைவாக இருவரும் சவுதி அரேபியாவிற்கு செல்கின்றனர்.
சவுதி மன்னை ஸ்பரிசம் செய்கின்றனர்.
சவுதியின் மெக்கா நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்க அருகில் நின்றவாறு இறைவனை துதிக்கின்றனர்.
தமது வாழ்வில் என்றும் இணைந்திருப்போம் என சத்தியம் செய்துக்கொள்கின்றனர்.
இறைவனின் சாட்சியான ஒருவரை ஒருவர் பார்த்து அன்பின் சாட்சியான முத்தமிட்டுக்கொள்கின்றனர்.
இவ்வாறிருக்கு அங்கு வருகை தந்த பாகிஸ்தானிய பிரஜை ஒருவரால் அவர்களின் உண்மையான உணர்வுகள் காணொளியாக பதிவு செய்யப்படுகின்றது.
அதன் பின்னர் அது சமூக வலைத்தளங்களிலும் அந்நாட்டிற்கு பிராந்திய பாதுகாப்பு துறையினருக்கும் அனுப்பப்படுகின்றது.
வாழ்வில் என்றும் பிரியாதிருப்போம் என இறைவன் சாட்சியாக திருமணம் செய்துக்கொண்டவர்களை நெருங்கிய அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு.
கைது செய்யப்படுகின்றார்கள்.
காணொளியை பார்த்து உறுதி இவர்களே அவர்கள் என உறுதி செய்துக்கொள்கின்றனர்.
புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது எனவும் உள்நாட்டு அமைச்சு அறிவிக்கின்றது.
நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுகின்றது.
கொடுமையிலும் கொடுமை ஈரோழு மாதங்கள் சுமந்த இருவரின் தாய்மார்களுக்கோ அல்லது அவர்களை வளர்த்த ஆளாக்கிய குடும்பத்தினருக்கோ அல்லது பங்களாதேஷ் அரசாங்கத்திற்கோ ஒரு அறிவிக்கவில்லை.
புனித மக்கா நகருக்கு சென்ற புதுமணத்தம்பதியினர் தமது கணவுகளுடன் சவுதி அரேபிய அரசாங்கத்தின் வாளுக்கு இறையாகியுள்ளனர்.
மண்ணுலகில் வாழ மனித இனம் உங்களை அங்கீகரிக்கவில்லை விண்ணுலகம் சென்றாவது நீங்கள் விரும்பியபடி முத்தமிட்டுகொள்ளுங்கள்.
ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்
#SaudiArabia #DeathSentence #BangladeshCouple #GulfNews #InternationalNews