Перейти к содержимому

எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் நடந்திருப்பது கிரிமினல் குற்றம் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Sivagangai News

0:00 / 0:00

எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் நடந்திருப்பது கிரிமினல் குற்றம் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

142 просмотра · 1 мес. назад
Sivagangai News
70 подписчиков
142 просмотра · 1 мес. назад
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் (எஸ்ஐஆர்) குளறுபடி - தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ்குமார் - பதவி விலக வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி தலைமை வகித்து பேசினார். இதில் கலந்து கொண்டோர் எஸ்ஐஆர் குளறுபடி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ்குமார் உடன டியாக பதவி விலக வேண் டும். அவரை கைது செய்ய வேண்டும், தேர்தல் தொடர் பாக ஞானேஷ்குமாரின் முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன் னாள் எம்எல்ஏ மாங்குடி, மாவட்ட காங்கிரஸ்கமிட்டி பார்வையாளர் துரை.சந்திர சேகர், மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில், வாக்கு திருட்டு என்ற சொற்றொடர் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அதன் விவரங்கள் எல்லாரையும் சென்றடைவதில்லை. இதுவரை பல்வேறு தேர்தல் நடந்திருக்கிறது. ஆனால் இது போன்ற எஸ்.ஐ.ஆர் நடந்தது கிடையாது. திருத்தம் என்பது வாக்காளர்களை நீக்குவது சேர்ப்பது மட்டும்தான். தற்போதைய எஸ்.ஐ.ஆர் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எஸ்.ஐ.ஆர்., திருத்தம் மூன்று முறை நடந்தது. முதல் கட்டம் 6கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில் ஆறு கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மூன்றாம் கட்டத்தில் 6 கோடி 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் மொத்தம் 13 கோடியே 30 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏன் நீக்கினார்கள்? தவறான பதிவு என கூறி ஒன்று அல்லது இரண்டு லட்சத்தை கூறலாம். ஆனால் 13 கோடி எவ்வாறு நீக்க முடியும் மேற்குவங்கத்தில் 22 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர் குறித்து மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளனர். இதில் நீதிமன்றத்தால் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே தீர்ப்பு வழங்க முடிந்தது. மீதி உள்ளவர்களுக்கும் பைசல் செய்வதற்குள் மூன்று தேர்தல் முடிந்து விடும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஒரு கிரிமினல் குற்றம். டெல்லியில் உள்ள 24 வார்டில் மட்டும் 2.7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அமர்த்தியா சென், அத்வானி, கணிதமேதை ராவ் என பிரபலமானங்களின் வாக்குகளை நீக்கிள்ளனர். எஸ்.ஐ.ஆர்., திருத்தத்தில் கேட்ட கேள்விகளே அபத்தமானது. பாட்டன் பெயர், பாட்டி பெயர், அவர்கள் பிறந்த தேதி, எந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார் என அபத்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்காதவர்களை நீக்கியுள்ளனர். நேற்று முன்தினம் வரை தேர்தல் ஆணையர்கள் மூன்று பேர் தவறு செய்தனர் என நினைத்தோம். தற்போது இரண்டு ஆணையர்கள் 14 முறை எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதற்கு விசாரணை கமிஷன் வேண்டும் மூன்று பேரில் ரெண்டு பேர் என்பதே மெஜாரிட்டி. ஆனால் அதை விடுத்து தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். மற்ற இருவரும் உடன் படவில்லை எனில் நீங்கள் எப்படி முடிவு எடுக்க முடியும் அஞ்சலி பார்கவா என்ற சமூக அலுவலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எதன் அடிப்படையில் இந்த எஸ்.ஐ.ஆர்., நடைமுறைப்படுத்தப்பட்டது என கேட்டபோது, தேர்தல் ஆணையம் அதுபோன்று எந்த தகவலும் இல்லை. அதற்கான பதில் இல்லை எனக் கூறியுள்ளது. அப்படி எனில் தூக்கத்தில் கனவு கண்டு எஸ்.ஐ.ஆர்., நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் முடிவு எடுத்தாரா? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் என அகில இந்திய இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. அதற்கு முன்பு இன்று இந்தியா முழுவதும் எஸ்.ஐ.ஆர்., குளறுபடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. காக்ரோச் ஜனதா பார்ட்டி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர், அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். எஸ்.ஐ.ஆர்., விவரத்தில் அடுத்த கட்டம் என்பது நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதை நான் சொல்ல இயலாது. த.வெ.க.,வை பொறுத்தவரை இதுவரை இந்தியா கூட்டணியில் அவர்கள் பங்கு வகிக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது. எஸ்.ஐ.ஆர்., குளறுபடி குறித்து நாளை நடக்கும் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்திற்கு பிறகு நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திமுக பொருத்தவரை அழைப்பு அனுப்பப்படும். ஆனால் அவர்கள் பங்கேற்பார்களா? என்பது தெரியாது, என்றார்.