சேலம் SMS ஸௌராஷ்டிர மகளிர் தினவிழா கொண்டாட்டம் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை
salem SMS sourashtra organization
0:00 / 0:00
சேலம் SMS ஸௌராஷ்டிர மகளிர் தினவிழா கொண்டாட்டம் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை
683 просмотра · 11 дней назад
salem SMS sourashtra organization
393 подписчика
683 просмотра · 11 дней назад
சேலம் மாவட்ட ஸௌராஷ்ட்ர சமூக முன்னேற்ற அறக்கட்டளை
🙋♀️👸🙋♀️👸🙋♀️👸🙋♀️👸🙋♀️
சேலம் ஸௌராஷ்டிர மகளிர் தின கொண்டாட்டம்
*08-03-2026 ஞாயிற்றுக்கிழமை*,
மாலை 4:25 முதல் 7:30 வரை
சேலம் வித்யாநகர்
ஸ்ரீ வித்யா மந்திர் விடுதி வளாகத்தில்
பேத்தி முதல் கொள்ளு பாட்டி வரை.
350-க்கும் மேற்பட்ட மகளிர் ஒரே இடத்தில்.
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி
அற்புதமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்தி
விளையாட்டு,
தாண்டியா நடனம்,
*இறைவணக்கம்*,
*நாட்டியம்*,
*வினாடிவினா*,
*சமையல் போட்டி*,
*பிறமொழி கலப்பின்றி ஸௌராஷ்ட்ர மொழியில் பேச்சு*,
*பரிசளிப்பு*,
அரசு துறைகளில் வெற்றிகரமாக பணி செய்யும் மகளிர் கௌரவித்தல்,
*சிறப்பு விருந்தினர்கள் உற்சாகமான பேச்சு*,
மகளிர்தின சிறப்பு செய்தி,
அனைவருக்கும் இரவு உணவு,
அனைத்துமே அருமையோ அருமை
முதல் ஆண்டு நிகழ்ச்சியிலேயே
எதிர்பார்த்ததை விட சிறப்பு, எண்ணிக்கையும் அதிகம், ஆட்டம், பாட்டம், கோலாகலம், கொண்டாட்டம்,
சந்தோஷம், ஆனந்தம்,
அற்புதம், அருமை,
நிகழ்ச்சி தொகுப்பு, விளையாட்டு,
போட்டிகள், அனைத்துமே பிரமாதம்.
மேலும்,
பாரம்பரிய ஸௌராஷ்டிர பலகாரங்கள்
அவரவர் வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்திய முதலாம், இரண்டாம், மூன்றாம் சிறப்பு பரிசுகள் தவிர, போட்டியில் பங்கேற்ற 32-பேருக்கும் ஆறுதல் பரிசும் கொடுக்கப்பட்டது.
விநாடி வினா போட்டி
பொது அறிவு, உலக நடப்பு, ஆன்மீகம் உள்ளிட்ட எளிய கேள்விக்கு பதில் கூறிய அனைவருக்கும் உடனடி பரிசு வழங்கப்பட்டது.
மற்றும் பரதநாட்டிய குழு உள்பட சிறப்பு செய்த அனைவருக்கும் பரிசளிக்கப்பட்டது.
இத்துடன் சுய உழைப்பின் மூலம் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணி செய்யும் சமூக முன்னோடி மகளிர் 15-பேர் மேடையில் கௌரவிக்கப்பட்டது அருமையான தருணமாக அமைந்தது.
தொடர்ந்து,
ஸௌராஷ்ட்ர மத்யசபை _துணைத்தலைவர்_,
உயர்திரு.*V.M.நாகராஜன்*, அவர்கள்.
கமலா மருத்துவமனை
உயர்திரு Dr.*L.R.விசாலாட்சி* அவர்கள்,
_SMS-தொண்டு அமைப்பு சார்பாக_,
உயர்திரு.*N.R.சந்திரசேகர்* அவர்கள்.
மகளிர்தின விழா கருத்துரை வழங்கினார்கள்.
_உலகில் உன்னதமான நமது பாரத நாட்டில் சக்தியின் வடிவமாக போற்றப்படுவது மகளிரே_.
_சனாதன தர்மத்தையும், பாரம்பரியத்தையும், குடும்ப உறவு அமைப்புகளையும் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருவதும் மகளிரே_.
ஆண்டு முழுவதும் மகளிருக்கான தினமே என்ற போதிலும்,
*மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி*,
சேலம் SMS-தொண்டு அமைப்பின் ஒரு குடையின் கீழ் செயல்படும் பல்வேறு மகளிர் அமைப்புகளின் ஒன்றாக சந்திக்கும் சந்தோஷ சந்திப்பாக மேற்கண்ட இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் அத்தனை சிறப்புக்கும் காரணம் மகளிர்தான்
பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, ஒரு வாரமாக தினசரி 40-க்கு மேற்பட்டவர்கள் சந்திப்பு நடத்தி, போட்டிகளுக்கு தயார் செய்து, பெயர்கள் பதிவு செய்து,
அப்பப்பா,
எத்தனை திட்டமிடல்!
எத்தனை வேலைகள்!!
எத்தனை குழுக்கள்!!!
அனைத்து குழு சகோதரிகளையும், தனித்தனியாக ஏறாளமான சகோதரிகளை பாராட்ட வேண்டும், அத்தனை பேரையும் பாராட்ட, வாழ்த்துகூற பக்கம் பக்கமாக எழுதுமளவு நிறைய பேர் நிறைய பணிகள் செய்துள்ளார்கள். அனைத்து சகோதரிகள் சார்பாக ஒரு சிலரையாவது, குறிப்பாக,
நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு, ஒருங்கிணைந்த மகளிர் சக்தியை வடிவமைத்த திருமதி தேவிகாபை, அளவுகடந்த அனுபவத்துடன் சலிக்காமல் பணி செய்த அமிர்தம்பை,
உடன் வலதுகரமாக நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய விஜயாபை, ஏறாளமானவர்களை போன் மூலம் அழைப்பு விடுக்க ஏற்பாடுகள் செய்த சங்கீதா பை, அவருடன் பட்டியல் எடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போன் செய்து நிகழ்ச்சிக்கு வரவழைத்த குழு சகோதரிகள், அமைதியாக ஏற்பாடுகளை திட்டமிட்ட மஞ்சுளா (கண்ணன்) பை, எப்போதும் தன்னுடன் ஒரு குழுவையே உடன் அழைத்து வந்து அனைவருடன் வேலை பார்த்த ரோஜாபை, சின்சியராக வேலைகளை வாரி போட்டு செய்த சாரதா பை, இன்முகத்துடன் இயல்பாக வேலைகளை செய்த பதிங்கா லட்சுமி பை, கோலாட்ட குழு சார்பாக ஜமுனா பை, காயத்ரி பை, அனுபவம் வாய்ந்த தனி ராணியாக நிர்மலா பை, பல அமைப்புகளில் பணி செய்த அனுபவத்துடன் உதவி புரிந்த சசிகலா பை, ஆராவாரத்துடன் சந்தோஷமாக பணிகளை செய்த மஞ்சுளா ராஜன் பை, இருக்குமிடம் தெரியாத அளவு அடக்கத்துடன் பணி செய்த திலகாபை, பண்புடன் பணி செய்த காஞ்சனா பை, குடும்ப விசேஷ சூழலிலும் முன்பதிவு கவனித்த லாவண்ய பை, பிரியா பை, உள்பட ஏறாளமான சகோதரிகள் மிகுந்த சிரமேற்கொண்டு SMS-ஸின் மகளிர்தின நிகழ்ச்சி அனைத்து மகளிரையும் இணைத்து இந்த அளவு நடத்தியது நம்மால் எதுவும் சாத்தியமே என்கிற தன்னம்பிக்கை இவர்களாலும், போன், வாட்ஸ் தகவல் பெற்றே நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் குழுவின் சக சகோதரிகளாலும் கிட்டியுள்ளது.
இன்னமும் இங்கே பெயர் குறிப்பிடாத ஏறாளமான சகோதரிகள் ஒரு வாரம் முழுவதும் தினமும் சில மணி நேரங்கள் சிரத்தையாக எந்த பிரதிபலன் பாராமல் பணியாற்றியதை நன்கறிவோம். இங்கே எவரும் பெயருக்காக எதையும் செய்யவில்லை. தன்னுடைய சொந்த வீட்டுக்கு தானே திட்டமிட்டு செய்வதை போலவே சமுதாய நலனுக்காக இணைந்து பணி செய்தது சிறப்பானது. இதுவே SMS-ஸின் இயல்பானது.
*அத்தனை சகோதரிகளுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்*.
ஒவ்வொறு பெண்ணின் வெற்றிக்கு பின்பும் அமைதியாக வழிநடத்தும் ஆண் இருப்பது உண்மை என்பது போல, இந்த நிகழ்ச்சிக்கு பின்னணியில் பணி செய்த பெரியவர்கள், சகோதரர்களின் உழைப்பை கணக்கிட முடியாதது. அமைதியானது. ஆழமானது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் நமது பொறுப்புகள், SMS-அமைப்பு மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகயுள்ளதை உணர முடிகிறது
உங்கள் அத்தனை பேரது கைங்கர்யத்தால் மேலும் சாதிப்போம். சமுதாய உயர்வு பெறுவோம்
அன்புடன்,
சேலம் மாவட்ட ஸௌராஷ்டிர சமூக முன்னேற்ற அறக்கட்டளை.