Thalattu 17 - Aalla Piranthvano || Visalakshi Palaniappan || Tamil Thalattu || Amma Lullaby
Nagarathar Aachi's World
0:00 / 0:00
Thalattu 17 - Aalla Piranthvano || Visalakshi Palaniappan || Tamil Thalattu || Amma Lullaby
15 401 просмотр · 6 лет назад
Nagarathar Aachi's World
18 тыс. подписчиков
15 401 просмотр · 6 лет назад
#poornasworldcollection #traditionalthalattu #thalattu #lublluy
Hello Friends
Vanakkam n welcome back to Poorna's 🌍. Today's video about Traditional chettinad thalattu by Mrs. Visalakshi Palaniappan, Trichy
Song : Aalla Piranthvano
ஆளப்பிறந்தவனோ
அரசாள வந்தவனோ
தானே வளர்ந்தவனோ தருமர்கள் தந்தவனோ
அஞ்சு குடிக்கரசோ பஞ்சவர்கள் பாற்குடமோ
முப்பாட்டன் ஆண்ட முகப்பு தலைவாசல்
தப்பாமல் ஆள தவம் பெற்று வந்த கண்ணோ
பாட்டனார் ஆண்ட பழுதில்லா ராஜ்ஜியத்தை
தாயாதி ஆளாதே தானாள வந்தவனோ
ஐயாக்கள் ஆண்ட தோப்பு துறவுகளை ஆளப்பிறந்தவனோ அரசாள வந்தவனோ
மதுரை இருகாதம் வாழ்மதுரை முக்காதம்
ஐம்பத்தறுகாதம் ஆளவந்த செல்வனோ நீ
ஆளப்பிறந்தானுக்கு யார் யாரு தோழன்மார்கள்
மேலத்தெருவிலே மெல்லியர்கள் தோழன்மார்கள்
கீழத்தெருவிலே கிளிப்பிள்ளை தோழன்மார்கள்
தெற்குத்தெருவிலே தேன்மொழி யார் தோழன்மார்கள்
கோடித்தெருவிலே குயில் இனங்கள் தோழன்மார்கள்
ஓடி விளையாட ஊரெல்லாம் தோழன்மார்கள்
ஆளப்பிறந்தான் அழுகுரலை தான் கேட்டு
மாடப்புறாவெல்லாம் வந்தே நிற்கிறது
கூவக்கூடாதென்று குரல் காட்டி நிற்கிறது
கொஞ்சி விளையாட குயில் வந்து நிற்கிறது
அழைத்து விளையாட அன்னம் வந்து நிற்கிறது
கேளிக்கை காட்ட கிளி வந்து நிற்கிறது
பச்சை பசுங்கிளிகள் பாலகனை தேடி வரும்
ஆடி விளையாட அணியிழையார் வந்து நிற்பார்
பாடி விளையாட பால்மொழியார் வந்து நிற்பார்
கூடி விளையாட கொம்பனையார் வந்து நிற்பார்
நாடி விளையாட நம்பிமார்கள் வந்து நிற்பார்
ஆண்ட அம்மான் கொல்லையிலே ஆனை வந்து மேயுதுன்னு
ஆனை அடித்தோட்டும் அம்புக்கு அழுதாயோ
குட்டி அம்மான் கொல்லையிலே குதிரை வந்து மேயுதுன்னு
குதிரை அடித்தோட்டும் கோலுக்கு அழுதாயோ
யாரடித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகியது
சித்திரை மாதம் சீறிவெள்ளம் வந்தது போல்
வைகாசி மாதம் வசந்த வெள்ளம் வந்தது போல்
அங்ககெடுத்த கண்ணீர் ஆறாய் குளம் பெருகி
தாயார்மடி நிறைந்து தகப்பனார் தோள்வழிந்து
மாமி மடிநிறைந்து மாமாக்கள் தோள் வழிந்து
ஆறாய் பெருகி ஆனை குளிப்பாட்டி
குளமாய் தேங்கி குதிரை குளிப்பாட்டி
வாய்க்கால் ஓடி வழிப்போக்கர் சந்தி செய்து
இஞ்சிக்குப் பாய்ந்து
இருவாச்சி வேரோடி
மஞ்சளுக்கு பாய்ந்து மருதாணி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே தளும்பினதாம் கண்ணீரு
வாழைக்கு பாய்கையிலே வற்றினதாம் கண்ணீரு
ஆராரோ ஆரிரரோ
#tamillullaby
#lullaby
#visalakshiachi
#aachithalattu
#visalakshipalaniappan
#shanmuganathapuramachi
#chettinaduthalattu
#thalattuachi
#nagaratharthalattu
#nagarathar
#traditionalthalattu
#chettinadthalattu
Hope u all enjoy
Watch till end
Like n share with ur Family n Friends
Thanks for the support
love u all