பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தல்! Jallikattu | Pongal Celeberation | Alanganallur
Dinamalar
0:00 / 0:00
பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தல்! Jallikattu | Pongal Celeberation | Alanganallur
1 669 просмотров · 1 год назад
Dinamalar
3,63 млн подписчиков
1 669 просмотров · 1 год назад
#Partnership பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ல் அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பங்கேற்க உள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இணைய வழி பதிவுகள் நடந்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க ஜல்லிகட்டுக்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
மாடு வளர்ப்போர் தங்களுடைய காளைகளுக்கு நடைப்பயிற்சி, நீச்சல்பயிற்சி உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர். மேலும் மாடுகளுக்கு சிறப்பு தீவனங்களை கொடுத்து அதனை கண்ணும் கருத்துமாக தயார்படுத்தி வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க ஜல்லிக்கட்டு போட்டி அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்குமான விளையாட்டாக மாறி விட்டதாக மாடுபிடி வீரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதிகப்படியான விதிமுறைகளால் போட்டியின் தன்மை மாறி விடுகிறது. விலை உயர்ந்த பரிசுகளால் வீரத்தை விலைக்கு வாங்கும் நிலையும் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் ஜல்லிகட்டு அழியும் நிலைக்கு சென்று விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
பாரம்பரியமான விளையாட்டை அதன் தன்மை மாறாமல் நடத்த அரசு முன்வர வேண்டுமென மாடு வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் வலியுறுத்துகின்றனர்.# #Jallikattu #PongalCeleberation #Alanganallur