Перейти к содержимому

Nayana Mani Thalaattu - நயன மணி தாலாட்டு - Islamic Spiritual Lullaby with Daff - Ahmad Salih Faheemi

Ahmad Salih Faheemi

0:00 / 0:00

Nayana Mani Thalaattu - நயன மணி தாலாட்டு - Islamic Spiritual Lullaby with Daff - Ahmad Salih Faheemi

440 838 просмотров · 5 л. назад
Ahmad Salih Faheemi
33,5 тыс. подписчиков
440 838 просмотров · 5 л. назад
Islamic spiritual lullaby which carries beseeching and wishes with a quick insight of the wisdom in relevance to the mystical knowledge (Tasawwuf) CREDITS: Lyrics & Voice: Hafiẓ B.S. Ahmad Salih Faheemi Daff: Sajid Khan (+91 90945 10119) Editing: MSL Studio Technical Support: Pilot Simple Software - Hong Kong www.pilot.com.hk Released by: Faheemiya Publishers (Chennai) Rumi International Sufi Council Supported by: Chinna Maraicar Famili (Kilakarai) LYRICS: நயன மணி தாலாட்டு اَللّٰهُ مَوْجُوْدٌ بِالْوُجُوْدِ صَلِّ عَلٰى طٰهٰ سَيِّدِ الْكَوْنَيْنِ مَحْبُوْبِ رَبِّ الْأَنَامِ அல்லாஹு மவ்ஜூதுன் பில் உஜூது ஸல்லி அலா தாஹா ஸெய்யிதில் கவ்னைன் மஹ்பூபி ரப்பில் அனாம் ஆராரோ ஆராரோ ஆராரிரோ! கண்ணான கண்ணுன்னைத் தாலாட்டுகின்றோம் கனியே நீ கண்ணுறங்கு முத்தே மலர்ச் செண்டே முழுதான நிலவே மயிலே நீ கண்ணுறங்கு 1. உள்ளமையை உணர்ந்து உள்ளும் புறமும் ஒன்றாகி ஹூவில் மறைந்து வேற்றுமை வேர்கள் நீ மறந்து வாஞ்சையாய் கண்ணுறங்கு 2. நூருல் முஹம்மதியை நடுவாம் நயன மணியில் நிலை நிறுத்தி வட்ட வடிவான காதலரை வாகாகக் கண்டுறங்கு 3. தூதர் முஹம்மதரின் தூய.. பரம்பரையில் வந்த நல் மணிகள் zஜஹ்ரா அலி ஹஸனைன் செல்வத்தை உள் வைத்து கண்ணுறங்கு 4. ஸித்தீக் உமர் உதுமான் பத்ரு உஹது ஷஹீதீன்கள் தோழர்களை சீலர் இமாம்கள் இறை நேசரை சிரமேற்று கண்ணுறங்கு 5. zஸைனுல் ஆபிதீனையும் முஹம்மது பாகிர் இமாம் ஜஅஃபர் ஸாதிகையும் அஹ்லுல் பைதினர் யாவரையும் அகமேற்று கண்ணுறங்கு 6. மூன்றில் ஒரு சுடராம் முன்னன் மஹ்மூதரைத் தொடர் மெய்ச் சுடராம் முஹ்யித்தீன் ராஜரை முன்னிறுத்தி முறையோடு கண்ணுறங்கு 7. ஒளியான உத்தமரை ஒரு நொடியேனும் பிரியாமல் காண்பேனென பகர்ந்திடும் ஷாதுலி நாயகத்தை உகந்து நீ கண்ணுறங்கு 8. சுல்தானுல் ஆரிஃபீனை செய்கு தாவூது ஒலியுல்லாஹ் செம்மலரை கஸ்ஸாலி இமாமை கல்பில் வைத்தே கனிவோடு கண்ணுறங்கு 9. மெய்ஞ்ஞான ஊற்றுகளாம் ஹிழ்ரு ஷம்ஸ் தப்ரேzஸ் இப்னு அரபியையும் ஞானி மெளலானா ரூமியையும் பேணியே கண்ணுறங்கு 10. அஜ்மீரின் நாயகராம் காஜா வென்னும் எங்கள் ஏழைப் பங்காளரை நாகூர் ஆளும் நாதாவையும் நாடியே கண்ணுறங்கு 11. யூஸுஃபு தாதாவையும் மஸ்தான் சாஹிபு மூஸா ஷா காதிரியை ஏர்பாதி அரசை நத்ஹர் ஒலியை ஏற்றியே கண்ணுறங்கு 12. ஷாமொலி ஸதகொலியை தைக்கா ஸாஹிப் உமர் நூஹு முத்தொலியை மோத்தி பாவா பல்லாக் ஒலியை முத்தியே கண்ணுறங்கு 13. ஆலிம் அரூஸவரின் ஸூஃபி கல்வத்து ஜல்வத்து நஹ்வியரின் ஆரிஃப் ஹபீப் கலீம் ஃபஹீமின் ஆசிகள் பெற்றுறங்கு 14. காதிரிய்யா சிஷ்திய்யா நக்ஷபந்து ஸுஹ்ரவர்திய்யா ஸந்நூஸிய்யா ஷாதுலி ரிஃபாஈ ஷைகுகளை சாற்றியே கண்ணுறங்கு 15. இருலோகக் கல்வியையும் இன்னும் தன்னை அறிந்திடும் ஞானத்தையும் கற்றும் உணர்ந்தும் தெளிவாகியே கருத்தோடு கண்ணுறங்கு 16. இறை வேதம் குர்ஆனையே இன்பம் மேலிட இதயத்தில் ஏந்தி அதன் உள்ரங்க வெளிரங்க ஞானங்களை உள்ளேற்றி கண்ணுறங்கு 17. பிரபஞ்சக் காரணராம் பிரிய நபி நாதர் மேல் பிரிசம் கொண்டு அவர் சொன்ன வழி முறை வாழ்வில் பேணி சொக்கியே கண்ணுறங்கு 18. உயர்வாம் ஷரீஅத்துடன் நல் தரீகத் ஹகீகத்து மஃரிஃபத்தை நன்றாகப் பேணி ஷுஹூது செய்து ஷுக்ரோடு கண்ணுறங்கு 19. முன் நஃப்ஸ் அம்மாராவின் சேஷ்டை எல்லாம் அடங்கி முன்னேறிச் சென்று ராழியா மர்ழிய்யா காமிலாவின் ரசனையில் கண்ணுறங்கு 20. ஐந்து நிலைகளிலும் படிப்படியாக ஏகி பரவசித்து லாஹூத்தின் இன்பத்தில் தரித்து ஃபஹ்மோடு கண்ணுறங்கு 21. நஃப்ஸேழை நன்கறிந்து ஹக்கின் உள்ளமை (خ)கல்கிலே கண்டுணர்ந்து நான் என்ற குறிப்பை முழுதாய் மறந்து நலவோடு கண்ணுறங்கு 22. பார்வையை உள் செலுத்தி பல ஆயிரம் திரைத் தாண்டி கருவைக் கண்டு கண்டது ஒன்றையும் விண்டாமலே களிப்போடு கண்ணுறங்கு 23. பாதினில் லாஹிரையும் ஜம்இல் ஃபர்கை கலக்காத பக்குவமும் ஃபனா பகாவின் பாக்கியமும் பெற்றே நீ கண்ணுறங்கு 24. கண்ணிய முர்ஷிதராம் காமில் குரு நாதரின் கதத்தில் சரணடைந்து முன்னோன் ஹபீபிலே கலந்து முக்தியாய் கண் வளர்வாய் #AhmadSalihFaheemi