#Paruvathil Konjam | Panam Padaithavan-1965 | பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் | TMS | MSV & TKR-Vaali
SMAS Thinagaraj சண்முகக்கனி
0:00 / 0:00
#Paruvathil Konjam | Panam Padaithavan-1965 | பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் | TMS | MSV & TKR-Vaali
735 просмотров · 3 дн. назад
SMAS Thinagaraj சண்முகக்கனி
564 подписчика
735 просмотров · 3 дн. назад
Song Name : Paruvathil Konjam
Movie: Panam Padaithavan-1965
Singer : L. R. Eswari, T. M. Soundararajan
Music : Viswanathan–Ramamoorthy
Lyrics : Vaali
படம்: பணம் படைத்தவன் (1965)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி
வரிகள்: வாலி
—————————
பாடல் வரிகள்:
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பெண்ணுக்கு அழகு வரும்
பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம்
ஆணுக்கு ஆசை வரும்
உன்னை நினைத்தேனோ உடல் இளைத்தேனோ
என்னைக் கொடுத்தேனோ நெஞ்சை எடுத்தேனோ
சொல்லத் தெரியாதோ சொல்லிப் புரியாதோ
அந்தக் கலைதானோ இந்த நிலைதானோ…(பருவத்தில்)
விழி மலரம்பு வீசிய பின்பு
அவள்தான் அருகில் வந்தாளோ
தொட்டவன் முன்னே தொடர்ந்தவள் பின்னே
ஆசையில் உருகி நின்றாளோ
மங்கை மலர்மேனி மன்னன் ஒரு தேனீ
இந்த இதழ் கோவை இன்னும் கொஞ்சம் தேவை
கண்கள் படலாமோ கைகள் தொடலாமோ
நாணம் வரலாமோ நானும் வரலாமோ
பொழுதொரு மயக்கம் பார்வையில் பிறக்கும்
புன்னகை தூதுவரும்
பகலுக்கு நினைவும் இரவுக்கு கனவும்
பூவிழி வாசல் வரும்
கண்ணென்ன சிவப்போ கனியிதழ் வெளுப்போ
இதுதான் காதல் என்பாரோ
கைவளை நழுவும் பொன்னுடல் மெலியும்
இதுதான் ஏக்கம் என்பாரோ
தூக்கத்தில் விழிக்கும் மௌனத்தில் பேசும்
அதுதான் இதயம் என்பாரோ
காலத்தை கழிக்கும் காதலில் பிழைக்கும்
அதுதான் இளமை என்பாரோ
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பெண்ணுக்கு அழகு வரும்
பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம்
ஆணுக்கு ஆசை வரும்