Перейти к содержимому

தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்|தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா| Thuckalay Peer Mohamed(Vali) Dhargah

Thandora Tamilan Islam

0:00 / 0:00

தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்|தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா| Thuckalay Peer Mohamed(Vali) Dhargah

110 806 просмотров · 4 года назад
Thandora Tamilan Islam
73,5 тыс. подписчиков
110 806 просмотров · 4 года назад
#dargah #thandoratamilan #islam #thuckalaydargah #thakkalaipeermohammeddargah #thuckalaypeermohamedvaliulla #tajmahal #travel #vlog #tamilnadudargahs Thuckalay https://maps.app.goo.gl/1uoNeR4xwvhVZ... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! தாஜ்மகால் உலக அதிசயங்களுள் ஒன்று. தமிழகத்திலும் தாஜ்மகாலை நிகர்த்த கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள தக்கலை ஷேக் பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா. மாஷா அல்லாஹ் இதனை தமிழகத்தின் தாஜ்மகால் என்றே சொல்லலாம். கேரள மாநிலம் திருவனந்தபுரம் இதன் அருகிலுள்ள விமான நிலையம். அங்கிருந்து சுமார் ‌35 கி.மீ. தொலைவில் தமிழக தென்மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த தக்கலை எனும் அழகிய ஊர். இந்த ஊரில் உள்ள மக்காபாளையம் பகுதியில்தான் அமைந்திருக்கிறது இந்த தர்ஹா. இந்தியாவின் வடபகுதியில் இருந்து வருபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் வரை ரயிலில் வந்து அங்கிருந்து நகரப்பேருந்திலோ வாடகை மகிழ்வுந்திலோ தக்கலையை அடையலாம். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து களியக்காவிளை, மார்த்தாண்டம் போன்ற ஊர்தளுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி தக்கலையில் இறங்கிக் கொள்ளலாம். தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள பீர்முகம்மது அப்பா தர்காவிற்கு நடந்தோ ஆட்டோவிலோ செல்லலாம். ஆட்டோ கட்டணம் 50 ரூபாய். ஞான மாமேதை தக்கலை ஷேக் பீர் முகம்மது அப்பா அவர்கள் தென்காசியில் பிறந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள யானைமலையின் உயர்ந்த சிகரங்களில் பல ஆண்டுகள் இறைவனை தியானம் செய்து அதன்பின் தக்கலையில் வந்து தங்கியுள்ளார். தமிழில் 18000க்கும் மேற்பட்ட ஞானப் பாடல்களை எழுதியுள்ளார். ஞானப் பாடல்கள், ஞானரத்தினக் குறவஞ்சி உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் இந்த Vlog வழியாக ஞானக்கடல் தக்கலை பீர் முகம்மதப்பா தர்காவிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இன்ஷா அல்லாஹ் காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்... மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை subscribe செய்யுங்கள். அல்லாஹ் கிருபை செய்வானாக... ஆமீன். To Contact Thandora Tamilan Islam A. Kadere Batcha 9524263587 kaderbatcha.a@gmail.com Assalamu Alaikum varah... Thuckalay Sheik Peer Mohammed Valiyullah Dargah situated in Thuckalay, Kanyakumari District, Tamilnadu, India. Nearest Airport: Thiruvanandhapuram, Kerala Nearest Railway Station: Nagercoil, Tamilnadu. Thuckalay Sheik Peer Mohammed Valiyullah is an Muslim sufi Saint who lived in 13 - 16th centuried in Thuckalay. A beautiful monument built for him look like Taj Mahal. So this Dargah is called Taj Mahal of Tamilnadu... Thuckalay Peer Mohammed Appa was a great scholar in Tamil. He wrote more than 18000 sonnets in Tamil... Thandora Tamilan Islam Channel brings you Thuckalay Dargah through this travel vlog...