கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல்: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
Dinamalar
0:00 / 0:00
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல்: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
2 936 просмотров · 20 часов назад
Dinamalar
3,64 млн подписчиков
2 936 просмотров · 20 часов назад
#KeralaCourtorder #PinarayiVijayan #CaseAgainstPinarayi #CPI #CPM #EDCase #KeralaPolitics #Congress #KeralaGovernmentScam
கேரளாவில் காங்கிரசை சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு 2016 முதல் 2026 வரை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரனாயி விஜயன் முதல்வராக இருந்தார்.
அப்போது, 2017ல் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸ்லாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற ஐடி நிறுவனத்திடம் இருந்து, எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப சேவையும் பெறாமல், அரசுக்கு சொந்தமான, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம், 2.7 கோடி ரூபாய் பணம் வழங்கியது வருமானவரிச் சோதனை தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டிலும் இல்லை.
இதன்படி சட்டவிரோத பணம் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த அமலாக்கத்துறை, பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் வீணாவின் கணவரும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடத்தியது.
இது குறித்து வழக்குப் பதிய சொல்லியும், அப்போதைய காங்கிரஸ் அரசு அதை செய்ய மறுத்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார், பினராயிக்கு எதிராக வழக்கு பதிய மறுத்தவிட்டனர்.
இந்நிலையில், ஊழலில் ஈடுபட்ட பினராயி, அவரது மகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியக் கோரி, வழக்கறிஞர் ஷாஜகான் என்பவர் கேரளா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையே லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்ய போதுமானது. ஆனால், போலீசார் அதை செய்ய மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
அமலாக்கத்துறை அறிக்கை போதாது. மாநில போலீஸ் உரிய விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட், இந்த வழக்கில் அமலாக்கத்துறை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
இதனால், முன்னாள் முதல்வர் பினராயி, அவரது மகள், மருமகன் உள்ளிட்டோர் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைவில் வழக்குப் பதிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது கேரள மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#KeralaCourtorder #PinarayiVijayan #CaseAgainstPinarayi #CPI #CPM #EDCase #KeralaPolitics #Congress #KeralaGovernmentScam #Whatsapp #Dinamalar