மட்டக்களப்பு போரதீவுப்பற்று சின்னவத்தை கிராமத்திற்கு நீண்டகால கனவு நனவு.!
போரதீவுப்பற்று செய்திகள்
0:00 / 0:00
மட்டக்களப்பு போரதீவுப்பற்று சின்னவத்தை கிராமத்திற்கு நீண்டகால கனவு நனவு.!
17 просмотров · 11 дн. назад
போரதீவுப்பற்று செய்திகள்
124 подписчика
17 просмотров · 11 дн. назад
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் நீண்டகாலமாக குடிநீர் வசதியின்றி சிரமப்பட்டுவந்த பகுதிக்கு, நேற்று (06.10.2026) ஆம் திகதி மாலை புதிய குடிநீர் இணைப்புகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் விடாமுயற்சியினால் மக்களுக்காக இந்த நீர் இணைப்பு சாத்தியமாக்கப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் வழிகாட்டலில் சபை தீர்மானத்திற்கு அமைவாக ஒதுக்கப்பட்ட 5.50 இலட்சம் ரூபாய் நிதியுடனும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் 2.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடனும், மொத்தம் 28.5 இலட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு, 26 குடும்பங்களுக்கு இந்நீர் இணைப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன், தேசிய நீர்வழங்கல் கிழக்கு மாகாணப் பொறுப்பான பொது முகாமையாளர் (GM) நசீர், தேசிய நீர்வழங்கல் அம்பாறை மாவட்ட முகாமையாளர் சிவராஜ் ,தேசிய நீர்வழங்கல் கொனாகொல்ல நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், போரதீவுப்பற்று பிரதேச சபையின் சின்னவத்தை வட்டார உறுப்பினர் கா. யோகராசா, கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் ம. கோபிநாத், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சு. இளமாறன்,நீர்வழங்கல் உத்தியோகஸ்தர்கள்,மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு இதன்மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
#Porativupattunews#tamilnews#sinnavattainews#vellavelinews#Batticaloanews#trincomalenews#Amparanews#jaffnanews#srilankanews#