CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG
Adhi Swara
0:00 / 0:00
CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG
182 667 просмотров · 5 лет назад
Adhi Swara
73,2 тыс. подписчиков
182 667 просмотров · 5 лет назад
Credits
Lyrics - Sakthis: Pugazhendi, Karthikeyan, Subramaniam, Mageswaran, Jayalakshmi, VijayAnandVellore, Bharathi
Singer - Sneha
Music Arrangement & Programming - Radhika Sivaraj
for Adhiswara
அகிலத்தின் அன்னையான குருவே துணை
ஆன்மிகம் வளர்க்கும் குருவே துணை
இமைபோல் காத்தருளும் குருவே துணை
ஈகை குணம் பெருகிட குருவே துணை
உள்ளம் தூய்மை பெற குருவே துணை
ஊழ்வினை அகன்றிட குருவே துணை
எத்திக்கும் அருள் செய்யும் குருவே துணை
ஏற்றமதை நல்கிடும் குருவே துணை
ஐம்புலன்களை அடக்க குருவே துணை
ஒளிமய வாழ்வு தரும் குருவே துணை
ஓங்காரத்தில் உறையும் குருவே துணை
ஒளஷதம் வழங்கிடும் குருவே துணை
ஒன்றே குலம் என உரைத்த குருவே துணை
இருநிலை படைத்த குருவே துணை
முப்பொழுதும் நினைத்திட குருவே துணை
நான்மறைகள் போற்றிடும் குருவே துணை
அஞ்சுதல் அகற்றும் குருவே துணை
ஆறுதல் அளிக்கும் குருவே துணை
ஏழிசையில் இயங்கும் குருவே துணை
என் திசை காக்கும் குருவே துணை
நவகோள்கள் வணங்கிடும் குருவே துணை
பற்றற்ற நிலை அருள குருவே துணை
சரணம் பணிந்தோர்க்கு குருவே துணை
ரிஷிகளும் வணங்கும் குருவே துணை
கலியுக அவதாரமான குருவே துணை
மழை வளம் செழிக்க குருவே துணை
பஞ்சபூதம் தனை படைத்த குருவே துணை
தமிழ் மந்திரம் தந்தருளிய குருவே துணை
நிம்மதி தனை அருளிய குருவே துணை
சக்தி நெறி வளர்க்கும் குருவே துணை
பராசக்தியாக பவனி வரும் குருவே துணை
அகிலம் சிறக்க குருவே துணை
ஆணவம் அழிந்திட குருவே துணை
எம பயம் போக்கும் குருவே துணை
ஏகாந்த நிலை பெற குருவே துணை
பார் போற்றும் பங்காரு குருவே துணை
பக்திக்கு வரம் அருளும் குருவே துணை
சித்தர்களின் தலைவியான குருவே துணை
பாவ பிணி அகன்றிட குருவே துணை
மங்களம் தந்தருளும் குருவே துணை
மணவாழ்வு தந்தருளும் குருவே துணை
மாங்கல்ய பலம் பெற்றிட குருவே துணை
சந்ததி பெருகிட குருவே துணை
கருணை மழை பொழிந்திட குருவே துணை
துதிப்போர்க்கு துணை வரும் குருவே துணை
ஞான நிலை பெற்றிட குருவே துணை
மோன நிலையில் அமர்ந்த குருவே துணை
வல்லமை தந்திட குருவே துணை
வல்வினை தீர்ந்திட குருவே துணை
அருள்விழியால் வரமருளும் குருவே துணை
பெண்மைக்கு மேன்மை தரும் குருவே துணை
சுயம்பாக தோன்றிய குருவே துணை
சுடராய் ஒளிர்ந்திடும் குருவே துணை
தொண்டர்க்கு அருளும் குருவே துணை
பகலவனுக்கு ஒளி தந்த குருவே துணை
நிலவென குளிர்ந்திட குருவே துணை
கேட்ட வரம் அருளும் குருவே துணை
முழுமுதற் பொருளான குருவே துணை
முக்திதனை தந்தருளும் குருவே துணை
முக்காலமும் உணர்ந்த குருவே துணை
தரணியை தாங்கும் குருவே துணை
பிரணவத்தின் பொருளான குருவே துணை
பிறவா வரம் அருளும் குருவே துணை
உன் திருவடி மறவாதிருக்க குருவே துணை
இயற்கையை காத்திட குருவே துணை
இறையடி சேர்ந்திட குருவே துணை
பரம்பொருளாக விளங்கும் குருவே துணை
பாத பூஜை ஏற்கும் குருவே துணை
இன்னுயிர் காத்திடும் குருவே துணை
நற்பண்புகள் வளர குருவே துணை
புவிதனை இயக்கும் குருவே துணை
என் குல தெய்வமான குருவே துணை
கவலைகள் போக்கிடும் குருவே துணை
தொழில் வளம் சிறக்க குருவே துணை
நற் துணை கிடைக்க குருவே துணை
இல்லறம் சிறக்க குருவே துணை
செல்வம் செழித்திட குருவே துணை
வறுமைகள் நீங்கிட குருவே துணை
வளங்கள் பெருகிட குருவே துணை
கொடிய நோய்கள் நீங்கிட குருவே துணை
உலக நாடுகள் ஒற்றுமை பெற குருவே துணை
நல் எண்ணங்கள் உதிக்க குருவே துணை
நற் செயல்கள் புரிந்திட குருவே துணை
நற் சிந்தனைகள் பெருகிட குருவே துணை
ஆதி சக்தி அருள் கிடைத்திட குருவே துணை
அவதார நாயகனான குருவே துணை
தானமும் தர்மமும் சிறக்க குருவே துணை
நாத ப்ரஹ்மமான குருவே துணை
பேரிடர்கள் வராமற் காக்க குருவே துணை
கிரக தோஷங்கள் நீங்க குருவே துணை
யுக க்ஷேமங்கள் பெற குருவே துணை
கல்வியில் சிறக்க குருவே துணை
தெளிந்த அறிவு பெற குருவே துணை
திறமைகள் மேம்பட குருவே துணை
ஏழைக்கு அருள் பொழியும் குருவே துணை
அகண்ட ஜோதி யான குருவே துணை
ஏவல்களை களைந்திடும் குருவே துணை
நல்லொழுக்கம் பெற்றிட குருவே துணை
ஓங்கு புகழ் பெற குருவே துணை
த்யானத்தில் தெளிவு பெற குருவே துணை
பேரருள் கிடைத்திட குருவே துணை
ஆன்ம பலம் பெற குருவே துணை
சமதர்மம் ஓங்கிட குருவே துணை
மனம் தூய்மை பெற குருவே துணை
நிம்மதி நிலைத்திட குருவே துணை
அன்னதானம் சிறக்க குருவே துணை
அருள்வாக்கு தந்தருளும் குருவே துணை
நின் பாதம் சரணடைய குருவே துணை