மங்கம்மாள் பட்டி ஸ்ரீகிருஷ்ணா கொண்டம்மாள் ஸ்ரீரெகுபதி கொண்டம்மாள் பக்தி பாடல்
Muruganantham
0:00 / 0:00
மங்கம்மாள் பட்டி ஸ்ரீகிருஷ்ணா கொண்டம்மாள் ஸ்ரீரெகுபதி கொண்டம்மாள் பக்தி பாடல்
2 727 просмотров · 1 мес. назад
Muruganantham
134 подписчика
2 727 просмотров · 1 мес. назад
ஜெய ஜெய ஸ்ரீ கொண்டம்மா, ஜெய ஜெய ஸ்ரீ கிருஷ்ணம்மா
ஜெய ஜெய ஸ்ரீ கிருஷ்ணம்மா ஜெய ஜெய ஸ்ரீ ரெகுபதியம்மா
பௌர்ணமி அழகாய்த் தோன்றிடும் தேவி
புண்ணியம் எல்லாம் தந்திடும் தேவி
அபி வா ரு குலம் காப்பவளே
அன்பின் வளமே கிருஷ்ணம்மாவே
உன்தீபம் நின்றாட பலகோலம் கண்டோமே (2)
குருவாய் வருவாய் அப்பிவாரம்மா
சூரிய குல சுந்தரி, சுந்தரராஜன் சோதரி
ஜெய ஜெய ஸ்ரீ கொண்டம்மா, ஜெய ஜெய ஸ்ரீ கிருஷ்ணம்மா
ஜெய ஜெய ஸ்ரீ கிருஷ்ணம்மா ஜெய ஜெய ஸ்ரீ ரெகுபதியம்மா
முழுமதி நேரம் பூஜைகள் ஏற்பாய்
முறைப்படி உன்னையே பணிந்திட வைப்பாய்
தல்லாகுளத்தில் தோன்றிய தங்கமே
உனை நினைத்தாலே அங்கம் சிலிர்க்குமே
உன் கோலம் வர்ணிக்கவே என் வார்த்தைக்குப் பஞ்சமே?
அழகே அறிவே அருளே
கண்ணபிரான் சோதரீ, எண்ணம் யாவும் உன்னிடம்
அன்புடன் ஏற்பாய் அப்பிவாரம்மா
ஜெய ஜெய ஸ்ரீ கொண்டம்மா, ஜெய ஜெய ஸ்ரீ கிருஷ்ணம்மா
ஜெய ஜெய ஸ்ரீ கிருஷ்ணம்மா ஜெய ஜெய ஸ்ரீ ரெகுபதியம்மா
சித்திரை ஒன்றில் சிறப்பலங்காரம்
பீடம் முழுவதும் மங்கலப் பொருட்கள்
நித்திரை ஓட்டும் கண்கொள்ளாக்காட்சி
மனம் முழுவதும் முத்திரை பதிக்கும்
பூமாலை, பாமாலை நாங்கள் கொண்டு வந்தோமே (2)
தசரத கோத்திர தயாபரி கொண்டம்மா
அனலில் உருவான, அற்புததெய்வம்
புனலின் உருவாய் ஆசி வழங்கும்
கற்பரசியே கனகமணிச்சுடரே
மாதரசியே மரகத ஒளியே
உன் மந்திர நாமம் அதைச் சொல்லி வந்தோமே (2)
மலர்வாய் முகமே மதியரசியே
ராகவனின் சோதரி சகலதோஷ நிவாரணி
ஜெய ஜெய ஸ்ரீ கொண்டம்மா
பதினொரு கோவில் பாங்குடனருளும்
பக்தரின் நெஞ்சை கொள்ளை கொள்ளும்
பெண் மகளே பேரெழிலே
பொன் மகளே எம்குலப் பொக்கிஷமே
உன் கோவில் கண்டாலே பலகோடி புண்ணியமே (2)
உணர்வில் பெருகும் அப்பிவாரம்மா
சர்வேஸ்வரி நீயே ஜெகதீஸ்வரி நீயே
ஆவாரம் செடி தலவிருட்சமே
அக்காள் தங்கையாய் அதனருகிலே
கோபுர அழகே கிருஷ்ணம்மாவே
குடமுழுக்காடும் ரெகுபதியம்மாவே
உன் லீலை சொன்னாலே அட நேரம் கொள்ளாதே (2)
வரமாய் அருளும் அப்பிவாரம்மா
என்மன அட்டிகையில் வைரமாய் ஜொலிப்பவளே
சிந்தையாவிலும் நறுமணம் பரப்பும்
அதிசயம் பூவே அப்பிவாரம்மாவே
நம்பி வந்தோமே நம்பி நின்றோமே
நன்மைகளருளும் சத்திய தெய்வம்
அந்த தல்லாகுள மரம் பல அதிசயம் சொல்லும் (2)
அடிகள் சரணம் ஸ்ரீகிருஷ்ண சோதரி
வனிதாமணியே புனிதவதியே
எத்தனை கோவில் எத்தனை ரூபம்
எத்தனை புனிதம் சூழ்ந்திடும் தேவி
காட்சிகள் தந்து ஆட்சி செய்கின்ற
அனுபவம் சொல்ல வார்த்தையேயில்லை
பூமாலை ஏற்பவளே பாமாலையும் ஏற்றுக் கொள்ளேன் (2)
அழியா அழகே அப்பிவாரம்மா
தாமதம் ஏனோ தயைபுரிவாய் தேவி
அடியவர் கோடி அனுதினம் நாடி
அர்ச்சனை புரியும் அப்பிவாரம்மாவே
அக்னியில் பூத்த அழகு கொண்டம்மா
அமைதியை நல்க என் அருகில் வாயேன்மா
உன் பாத தரிசனமே பல பாவம் போக்குமே (2)
வெலம வம்சத் தருவின் ஆணிவேரே
விதி மற்றும் வீர்யமே சதி ஒழிக்கும் சாகசமே
அபிசெட்டி வணங்கும் அழகுதேவி
அனுதினம் ஆராதிக்கும் ஆனந்தரூபிணி
வல்வினை ஓட்டும் கிருஷ்ணம்மாவே
நல்விதி அருளும் ரெகுபதியம்மாவே
உனது அருளாலே வெலமகுலம் தழைக்குமே (2)
தவமே வரமே தந்தருள்வாயே
மனம் தந்தோம் மதியில் இருத்தினோம்
பூஜைப் பெட்டிகள் ஆடிவரும் அழகு
தேவ பூஜா அம்மாவே உனக்கு
காண்பவர் நெஞ்சில் கவலைகள் மறையும்
தெளிவு பிறக்கும் தேடல் கிடைக்கும்
உன் கைகள் சிவக்கும் (2)
வரங்களை வழங்கி வந்தோம் இறைவி வந்தனை செய்ய
அந்நியர்கள் விரட்டிடவே அக்னியில் இறங்கினாய்
அண்ணனுடைய கனவினில் தெய்வமானதைச் சொன்னாய் (2)
அப்பிவாரு குலம் காக்க சபதம் எடுத்தாய் (2)
அன்பர்களை அருள்மழையில் தினமும் நனைத்தாய் (2)
அபய ஹஸ்த முத்திரை காட்டும் எழிலரசியே
அம்மா என்றழைத்தவுடன் ஓடி வருபவளே (2)
நாமணக்கும் தமிழாலே பாடுவோம் அம்மா (2)
நன்றியுணர்வில் எங்கள் நெஞ்சம் நிறையும் அம்மா (2)
கல்வி தரும் நான்முகியாம் கலைமகள் நீயே
காலைகால சக்தியான மலைமகளும் நீயே (2)
செல்வம் தரும் செந்திருவே அம்மா தாயே (2)
சிந்தைகள் வெளிக்காட்டும் எல்லாம் நீயே (2)
தாமோதரன் சோதரீ தயவு பண்ணு அம்மணி (3)
கிருஷ்ணம்மா, கிருஷ்ணம்மா எம் குலதெய்வமே
பலமங்கலங்கள் அருள்பவளே ஸ்ரீ ஹரி சோதரி (2)
வளமெல்லாம் உனதருளால் வாழுதம்மா (2)
நீ வந்திருந்து எங்கள் மனை ஆளும்மம்மா (2)
ஓம் நமோ ஸ்ரீ கொண்டம்மா (3)
ஓம் நமோ நமோ
ஓம் நமோ ஸ்ரீ கொண்டம்மா (3)
ஓம் நமோ நமோ
ஓம் நமோ ஸ்ரீ கொண்டம்மா ஓம் நமோ நமோ
உலகமெல்லாம் படைத்து காத்து
உயிரிலெல்லாம் நிறைந்து நின்று
உண்மை யறிவானந்தமாய் ஓங்கும் தேவியே!
நலங்களெல்லாம் அருள்வதற்காய்
நம்மையெல்லாம் காப்பதற்கு
நமதருகில் வீற்றிருக்கும் அப்பிவாரம்மாவே!
அன்பு ஓங்க அருளோங்க
அறங்களோங்க அமைதியோங்க
ஆற்றல் ஓங்க அருள் புரிவாய் அப்பிவாரம்மாவே!
இன்பமோங்க எளிமை யோங்க
எங்கும் நிறை வளங்களோங்க
எம்மை என்றும் பாதுகாப்பாய் கிருஷ்ண கொண்டம்மாவே!
எம்மை என்றும் பாதுகாப்பாய் ரெகுபதி கொண்டம்மாவே!