Перейти к содержимому

Thiruppugazh Thirumagal Ulavum (Kadhirgamam) - திருப்புகழ் திருமகள் உலாவும் (கதிர்காமம்)

Yaazh Music

0:00 / 0:00

Thiruppugazh Thirumagal Ulavum (Kadhirgamam) - திருப்புகழ் திருமகள் உலாவும் (கதிர்காமம்)

8 807 просмотров · 13 часов назад
Yaazh Music
105 тыс. подписчиков
8 807 просмотров · 13 часов назад
Thiruppugazh Thirumagal Ulavum (Kadhirgamam) - திருப்புகழ் திருமகள் உலாவும் (கதிர்காமம்) #thirupugazh #kadirkamam #ThiumagalUlavum #கதிர்காமம் #திருமகள்உலாவும் #திருப்புகழ் Written By – Saint Arunagirinadhar Vocals – Venkatesan Thirunaukkarasu Music Mixing and Mastering - Karthik Sekaran Instagram @karthikmusicmentor Lyrics Diction Consultant - ShriValli Creative Head & Art Direction – Venkatesan Thirunaukkarasu Video editing and Animation - Kumar 94426-15305 Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com) Produced by - Yaazh Music திருமகள் உலாவும் இருபுய முராரி திருமருக நாமப் பெருமாள்காண்! செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் பெருமாள்காண்! மருவும் அடியார்கள் மனதில் விளையாடு மரகத மயூரப் பெருமாள்காண்! மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காமப் பெருமாள்காண்! அருவரைகள் நீறு பட, அசுரர் மாள, அமர்பொருத வீரப் பெருமாள்காண்! அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாதப் பெருமாள்காண்! இருவினை இலாத தரு வினை விடாத இமையவர் குல ஈசப் பெருமாள்காண்! இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இருதன விநோதப் பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... திருமகள் உலாவும் இருபுய ... லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய முராரி திருமருக நாமப் பெருமாள்காண் ... திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான். செகதலமும் வானும் ... மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகுதிபெறு பாடல் ... மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை தெரிதரு குமாரப் பெருமாள்காண் ... அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான். மருவும் அடியார்கள் மனதில்விளையாடு ... வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும் மரகதமயூரப் பெருமாள்காண் ... பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான். மணிதரளம் வீசி யணியருவி சூழ ... மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி* சூழ்ந்து மருவு கதிர்காமப் பெருமாள்காண் ... விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான். அருவரைகள் நீறு படஅசுரர் மாள ... பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க அமர்பொருத வீரப் பெருமாள்காண் ... போர் புரிந்த வீரப் பெருமான் நீதான். அரவுபிறை வாரி விரவுசடை வேணி ... பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய அமலர்குரு நாதப் பெருமாள்காண் ... பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான். இருவினையிலாத ... நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும் தருவினைவி டாத இமையவர் ... கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின் குலேசப் பெருமாள்காண் ... குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான். இலகுசிலை வேடர் கொடியின் ... விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின் அதிபார இருதனவிநோதப் பெருமாளே. ... அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே. Thirumagal ulaavum irubuya muraari thirumaruga naama perumaal kaan! Segathalamum vaanum migudhi peru paadal theritharu kumaara perumaal kaan! Maruvum adiyaargal manadhil vilaiyaadu maragatha mayoora perumaal kaan! Mani tharalam veesi ani aruvi soozha maruvu kathirkaama perumaal kaan! Aruvaraigal neeru pada, asurar maala, amar porutha veera perumaal kaan! Aravu pirai vaari viravu sadai veni amalar gurunaatha perumaal kaan! Iruvinai ilaatha tharu vinai vidaatha imaiyavar kula eesa perumaal kaan! Ilagu silai vedar kodiyin adhi baara irudhana vinodha perumaale. ......... Meaning ......... thirumagaL ulAvum irubuya murAri: Lakshmi embraces both shoulders of Vishnu thirumaruga nAmap perumALkAN: whose handsome nephew is none but You, Great One! jegathalamum vAnu migudhipeRu pAdal: The Tamil songs (ThEvAram) most famous in both worlds theritharu kumArap perumALkAN: were composed by You (as ThirugnAna Sambandhar), Great One! maruvumadi yArgaL manadhil viLaiyAdu: You play in the hearts of Your devotees worshipping You marakatha mayUrap perumALkAN: You mount the emerald-green peacock, it's Yours, Great One! maNitharaLam veesi aNiyaruvi sUzha: Offering pearls and gems are pretty waterfalls*, encircling maruvu kadhir kAmap perumALkAN: lovely KadhirgAmam, and You are its Lord, Great One! aruvaraigaL neeRu pada asurar mALa: To demolish huge mountains and to destroy the demons (asuras) amarporudha veerap perumALkAN: You waged a war, Oh valorous and Great One! aravupiRai vAri viravusadai vENi: The snake, the crescent moon and the river (Ganga) adorn the tresses amalarguru nAthap perumALkAN: of the pure one, SivA; You are His Master, Great One! iruvinaiy ilAdha tharuvinai vidAdha imaiyavar: For the DEvAs, who do not have to suffer the karmas (good and bad deeds) and who would never leave their land (heaven) with its KaRpaga Tree, and for kulEsap perumALkAN: their Lord, IndrA, You are the Greatest Lord! ilagusilai vEdar kodiyin: With the damsel, VaLLi, belonging to the tribe of hunters bearing the bow, adhi bAra iruthana vinOdhap perumALE.: You love to play romantically on her bosom, Oh Great One!