Перейти к содержимому

குருபாதம் பணிந்திடுவோம் குறைவின்றி வாழ்ந்திடுவோம் | பெரியவா | Mahaperiyava | விஜயதசமி | சங்கரா

பெரியவா பாமாலை

0:00 / 0:00

குருபாதம் பணிந்திடுவோம் குறைவின்றி வாழ்ந்திடுவோம் | பெரியவா | Mahaperiyava | விஜயதசமி | சங்கரா

94 просмотра · 11 ч назад
பெரியவா பாமாலை
1,56 тыс. подписчиков
94 просмотра · 11 ч назад
பெரியவா பாமாலை Periyava Pamalai பெரியவா சரணம் 🙏🙏 Periyava Sharanam 🙏 🙏 அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள் பூர்விகல்யாணி ராகம் விருத்தம் பாருக்கு அத்வைதமளித்த ஆதிசங்கரகுருவே சரணம் பக்திவழி காட்டிய மகாபெரியவா சரணம் பொதுநலம் விழைந்த புதுபெரியவா சரணம் பண்பாடு காத்துவரும் பாலபெரியவா சரணம் புண்ணியபீட வழிவந்த இளையபெரியவா சரணம் பல்லவி விஜயதசமி நந்நாளில் குருபாதம் பணிவோமே வினைகள் தீர்ந்திடவே குருவினை துதிப்போமே சரணம் 1 அத்வைதம் அளித்தவராம் ஆதிசங்கரரை துதிப்போமே அன்புவழி காட்டியவராம் ஆதிசங்கரரை துதிப்போமே அளப்பரிய நூற்கள்தந்த ஆதிசங்கரரை துதிப்போமே ஆறுமதம் வகுத்தவராம் ஆதிசங்கரரை துதிப்போமே (விஜயதசமி) சரணம்2 நடமாடும் தெய்வமாம் மகாபெரியவாளை துதிப்போமே நமைநடத்த வந்தவராம் மகாபெரியவாளை துதிப்போமே நல்லறம் சொன்னவராம் மகாபெரியவாளை துதிப்போமே நால்வேதம் போற்றியவராம் மகாபெரியவாளை துதிப்போமே (விஜயதசமி) சரணம் 3 மலர்நகையால் அருள்பவராம் புதுபெரியவாளை துதிப்போமே மறைமதம் வளர்த்தவராம் புதுபெரியவாளை துதிப்போமே மக்கள்நலம் விழைந்தவராம் புதுபெரியவாளை துதிப்போமே மாசற்ற மனத்தினராம் புதுபெரியவாளை துதிப்போமே (விஜயதசமி) சரணம் 4 கலாச்சாரம் காப்பவராம் பாலபெரியவாளை துதிப்போமே கனிவோடு போதிப்பவராம் பாலபெரியவாளை துதிப்போமே கருணைமிகக் கொண்டவராம் பாலபெரியவாளை துதிப்போமே காஞ்சிபீடம் வீற்றிருப்பவராம் பாலபெரியவாளை துதிப்போமே (விஜயதசமி) சரணம் 5 புன்னகை முகத்தினராம் இளையபெரியவாளை துதிப்போமே புனிதமறைகள் அறிந்தவராம் இளையபெரியவாளை துதிப்போமே புண்யபீட வழிதோன்றலாம் இளையபெரியவாளை துதிப்போமே பூங்கரத்தால் ஆசிதருபவராம் இளையபெரியவாளை துதிப்போமே (விஜயதசமி) சரணம் சரணம் ஆதிசங்கர குரோ சரணம் சரணம் சந்திரசேகர குரோ சரணம் சரணம் ஜயேந்திர குரோ சரணம் சரணம் விஜயேந்திர குரோ சரணம் சரணம் சத்ய சந்திரசேகரேந்திர குரோ.