Murugan Thiruppugazh | 3 Songs to Overcome Maya & Desire
Bakthi Thamizh
0:00 / 0:00
Murugan Thiruppugazh | 3 Songs to Overcome Maya & Desire
993 просмотра · 10 дней назад
Bakthi Thamizh
71 подписчик
993 просмотра · 10 дней назад
முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் திருப்புகழ் medley.
இந்தப் பாடலில் இடம்பெறும் திருப்புகழ்கள்:
1. பொருப்புறுங் கொங்கையர் — திருப்பரங்குன்றம்
2. மன்றலங் கொந்துமிசை — திருப்பரங்குன்றம்
3. வடத்தை மிஞ்சிய — திருப்பரங்குன்றம்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களின் பக்தி இசை வடிவம்.
இந்த இசை வடிவமைப்பு ஹிந்தோளம் ராகச் சாயலிலும், திஸ்ர திரிபுடை தாள
நடையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
Lyrics: அருணகிரிநாதர்
Sthalam: திருப்பரங்குன்றம்
இந்தப் பதிவில் AI-உதவியுடன் உருவாக்கப்பட்ட இசை மற்றும் காட்சிகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
Muruga அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
வேல் வேல் முருகன் அரோகரா!
Lyrics:
[SONG 17]
பொருப்புறுங் கொங்கையர்\
பொருட்கவர்ந்தொன்றிய\
பிணக்கிடுஞ் சண்டிகள் வஞ்சமாதர்
புயற்குழன்றங் கமழ்\
அறற்குலம் தங்கவிர்\
முருக்குவண் செந்துவர் தந்துபோகம்
அருத்திடுஞ் சிங்கியர்\
தருக்கிடுஞ் செங்கயல்\
அறச்சிவந்தங்கையில் அன்புமேவும்
அவர்க்குழன்றங்கமும்\
அறத்தளர்ந்தென் பயன்\
அருட்பதம் பங்கயம் அன்புறாதோ
திருப்பரங்குன்றுறை தம்பிரானே\
திருப்பரங்குன்றுறை தம்பிரானே
மிருத்தணும் பங்கயன்\
அலர்க்கணன் சங்கரர்\
விதித்தெணுங் கும்பிடு கந்தவேளே
மிகுத்திடும் வன்சமணரைப்\
பெருந்திண்கழு மிசைக்கிடுஞ்\
செந்தமிழ் அங்கவாயா
பெருக்குதண் சண்பக\
வனத்திடங் கொங்கொடு\
திறற்செழுஞ் சந்தகில் துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி\
தனத்துடன் சென்றணை\
திருப்பரங்குன்றுறை தம்பிரானே
திருப்பரங்குன்றுறை தம்பிரானே\
திருப்பரங்குன்றுறை தம்பிரானே
[SONG 18]
மன்றலங் கொந்துமிசை\
தெந்தனத் தெந்தனென\
வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமுது\
உண்டுகொண்டு அன்புமிக\
வம்பிடுங் கும்பகன தனமார்பில்
ஒன்ற அம்பு ஒன்று விழி\
கன்ற அங்கம் குழைய\
உந்தியென்கின்ற மடு விழுவேனை
உன் சிலம்பும் கனகத்\
தண்டையும் கிண்கிணியும்\
ஒண்கடம்பும் புனையும் அடிசேராய்
தென்பரங்குன்றிலுறை பெருமாளே\
தென்பரங்குன்றிலுறை பெருமாளே
பன்றியங் கொம்பு கமடம்\
புயங்கம் சுரர்கள் பண்டை\
என்பு அங்கம் அணிபவர் சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி\
வந்துவந்து ஐந்துகர\
பண்டிதன் தம்பியெனும் வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள்\
தந்தபெண் கொண்டுவளர்\
செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை
திங்களுஞ் செங்கதிரும்\
மங்குலுந் தங்குமுயர்\
தென்பரங்குன்றிலுறை பெருமாளே
தென்பரங்குன்றிலுறை பெருமாளே\
தென்பரங்குன்றிலுறை பெருமாளே
[SONG 19]
வடத்தை மிஞ்சிய\
புளகித வனமுலை\
தனைத் திறந்தெதிர் வருமிளைஞர் உயிர்
மயக்கி ஐங்கணை\
மதனனை ஒரு அரு\
மையினாலே
வருத்தி வஞ்சக\
நினைவொடு மெலமெல\
நகைத்து நண்பொடு வருமிரும் என உரை
வழுத்தி அங்கவர்\
ஒடு சருவியுமுடல்\
தொடுபோதே
திருப்பரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே\
திருப்பரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே
விடத்தை வென்றிடு\
படைவிழி கொடுமுள\
மருட்டி வண்பொருள் கவர்பொழுதினில் மயல்
விருப்பென்பும்படி\
மடிமிசையினில் விழு\
தொழில்தானே
விளைத்திடும் பல\
கணிகையர் தமது பொய்\
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்பதந்தனில்\
அருள்பெற நினைகுவ\
துளதோதான்
திருப்பரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே\
திருப்பரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே
குடத்தை வென்றிரு\
கிரியென எழில்தள\
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்கரும்பின் மெய்\
துவள்புயன் எனவரு\
வடிவேலா
குரைக்கருங்கடல்\
திருவணை எனமுனம்\
அடைத்திலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும்பட\
ஒருகணை விடுமரி\
மருகோனே
திடத்தெதிர்ந்திடும்\
அசுரர்கள் பொடிபட\
அயிற்கொடும் படை விடுசரவணபவ
திறற்குகன் குரு\
பரனென வருமொரு\
முருகோனே
#Thiruppugazh #Murugan #TamilDevotional #Thirupparankundram #Arunagirinathar
#Thiruppugazh #Thiruparankundram #Arunagirinathar #TamilDevotional
#arupadaiveedu #murugan #kumaran #valli #deivaanai #arupadaiveedu_playlist