ஊரைக்காக்க வெள்ளைக் குதிரையில் பவனி வரும் அய்யனார் | புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் அய்யனார் காேயில்
Village Oorvalam
0:00 / 0:00
ஊரைக்காக்க வெள்ளைக் குதிரையில் பவனி வரும் அய்யனார் | புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் அய்யனார் காேயில்
12 024 просмотра · 3 г. назад
Village Oorvalam
142 тыс. подписчиков
12 024 просмотра · 3 г. назад
ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனார் திருக்காேயில்
விழுப்புரம் மாவட்டம் கீழ்ப் புத்துப்பட்டில் ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோயிலைச்சுற்றி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் மூலிகை வனம் அமைந்துள்ளது. இங்கு அரியவகை மூலிகைகள் உள்ளதால் அவற்றைத் தீண்டும் காற்று நம்மீதும் படர, உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.
முதலாம் குலோத்துங்கன் இங்கே அய்யனாரப்பனுக்கு கோயில் கட்டினான். 1995ம் ஆண்டு கோயில் மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. 2001ம் ஆண்டு 5 நிலை ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஏழரைநாட்டுச்சனி, அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் அய்யனாரப்பனுக்கு தீபமேற்றி வழிபட்டால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புதன்கிழமை தோறும் இங்கு வந்து வழிபட்டால் கல்வியில் ஆர்வமும், மேன்மையும் உண்டாகும்; கல்வி, கலைகளில் தேர்ச்சி பெறவும் முடியும். சூரிய அஸ்தமனம் வரைதான் இறைவன் அய்யனாரப்பன் இங்கிருப்பதாகவும், அதன்பிறகு மேலோகம் போய்விடுவதாகவும் ஐதீகம். அர்த்தஜாமத்தில் (நடு இரவு) ஊரைக்காக்க வெள்ளைக் குதிரையில் அவர் பவனி வருவதாகவும் சொல்கிறார்கள்.
இதனாலேயே இக்கோயிலில் உள்ள குதிரையின் காலில் பக்தர்கள் சீட்டு கட்டுகிறார்கள். இங்கு அய்யனாரப்பன் சிவபெருமானின் பெயரையும் தாங்கி மஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்.
திருமணத் தடை நீக்கும் தலமாக இது விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு அந்தப் பேறு பெறுகிறார்கள். பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தோஷம் போக்கும் தலமாக இது விளங்குகிறது.
ஆடி மாதம் இங்கே திருவிழா மாதமாகும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அய்யனாரப்பனை வணங்கிய பின்னரே சபரிமலைக்கு செல்வார்கள். பொதுவாகதிங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். நடுநாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அய்யனாரப்பன்தான் குலதெய்வம். எனவே அவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தங்கள் துன்பம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.
#கீழ்ப்புதுப்பட்டு
#புதுப்பட்டு
#மஞ்சனீஸ்வரன்
#மஞ்சனீஸ்வரர்
#அய்யனார்
#மஞ்சனீஸ்வரஅய்யனார்
#கீழ்ப்புத்துப்பட்டுமஞ்சனீஸ்வரஅய்யனார்கோயில்
#அய்யனார்கோயில்
#குலதெய்வம்
#Manjaneeswarar
#ManjaneeswararAyyanar
#Keezhputhupattu
#puthupattuAyyanar
#KeezhputhupattuAyyanar
#Ayyanarkovil
#Ayyanartemple
#ayyanar
#kulatheivam
#pondicherry
#villupuram
#templesintamilnadu
#temples
#templesofindia
#villageoorvalam
#puthupattuAyyanartempletiming
#puthupattuAyyanarkoviltiming
#puthupattuAyyanarkovilbus