Перейти к содержимому

043. கண்ணன் லீலைகள் இரண்டாம் பகுதி - பாம்பன்விளை கீதா வகுப்பு 20200315

vedanishtha

0:00 / 0:00

043. கண்ணன் லீலைகள் இரண்டாம் பகுதி - பாம்பன்விளை கீதா வகுப்பு 20200315

116 просмотров · 6 л. назад
vedanishtha
1,01 тыс. подписчиков
116 просмотров · 6 л. назад
பாம்பன்விளை கீதா வகுப்பு 20200315 113556 ஸ்ரீமத் பகவத் கீதா முன்னுரை 43 த்யாந ஶ்லோகம் 8 1. தீக் குடித்தான் காளியனை அடக்கி, அவன் தந்த இரத்தினத்துடன் கண்ணன் நீரிலிருந்து வெளியே வந்தபொழுது கோபாலர்கள் கண்ணனைச் சூழ்ந்து தழுவிக் கொண்டார்கள். ஆம்பாடி மக்களும் குழந்தைகளைத் தேடி காளிந்தி நதிக்கரை வந்து சேர்ந்தார்கள். பொழுது சாய்ந்து விட்டிருந்ததால் அனைவரும் அங்கேயே தங்கினர். காட்டுத்தீ ஏற்பட்டு அவர்களைச் சூழ, கண்ணன் அந்தத் தீயை விழுங்கி அவர்களைக் காப்பாற்றினான். பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 2. ப்ரலம்பனை அழித்தது ஒருமுறை கோபாலர்கள் பாண்டீரக #அரச மரத்தடியின் நிழலில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ப்ரலம்பன் எனும் அஸுரன் அவர்களோடு அவர்களாக கோபாலர் உருக்கொண்டு விளையாட்டில் கலந்துகொண்டான். கிருஷ்ண, ராமர்கள் இந்த வஞ்சகத்தை உணர்ந்துகொண்டார்கள். அவர்கள் ஒரு திட்டம் தீட்டி, ஒருவருக்கொருவர் சண்டை இட வேண்டும். தோற்றவர் ஜயித்தவரை முதுகில் / தோளில் சுமக்க வேண்டும். சண்டை துவங்கியது. ஸ்ரீதாமன் கிருஷ்ணனைத் தோற்கடித்தான். வ்ருஷபன் பத்ர ஸேனனைத் தோற்கடித்தான். பல பத்ரன் ப்ரலம்பனைத் தோற்கடித்தான். சட்டப்படி கிருஷ்ணன் ஸ்ரீதாமனையும், பத்ர ஸேனன் வ்ருஷபனையும், ப்ரலம்பன் பல பத்ரனையும் தோளில் சுமந்தனர். ஆனால் ப்ரலம்பன் பல பத்ரனுடன் வானில் பறக்க ஆரம்பித்தான். பல பத்ரன் அவன் மண்டையைப் பிளந்தான். ப்ரலம்பன் அஸுரனாக மாறி உயிரற்று விழுந்தான். 3. மீண்டும் காட்டுத்தீ கோபாலர்கள் காளிந்தி நதிக்கரையிலிருந்த முஞ்சா வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மீண்டும் ஒரு முறை சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். #கண்ணன் அவர்களைக் கண்ணை மூடி நிற்கச் சொன்னான். அந்த சமயத்தில் கண்ணன் அந்தக் காட்டுத்தீயை அம்ருதம் போல விழுங்கிவிட்டான். கோபாலர்கள் கண்ணைத் திறந்து பார்த்த போது அவர்கள் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் எந்த தீங்குமின்றித் தப்பித்திருந்தார்கள். பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 423 4. பிராமணர் மனைவிகளுக்கு அருளியது ஒருமுறை கண்ணனும் கோபாலர்களும் காளிந்தி நதிக்கரயோரமாக வெகுதூரம் சென்று விட்டார்கள். அவர்களுக்கு மிக்கப் பசி எடுத்தது. பிராமணர்கள் வீடுகளிலிருந்து #உணவு வாங்கி வருமாறு கண்ணன் கோபாலர்களை அனுப்பினான். அவர்கள் உணவுடன் வந்து கண்ணனுடைய ஆஶீர்வாதமும் பெற்றுச் சென்றனர் பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 5. ஆடை திருடியது காளிந்தி நதியில் குளித்துக் கொண்டிருந்த கோபியர்களுடைய ஆடையை எடுத்துக்கொண்டு மரத்திலேறி குழலூத ஆரம்பித்தான். வணங்கிப் பிரார்த்தித்த அவர்களுக்கு ஆடையைத் திருப்பிக் கொடுத்தான் பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 6. கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்தது ஆம்பாடி மக்கள் மழைக் கடவுளான இந்திரனுக்கு மழைக்காக பூஜை செய்வது வழக்கம். கண்ணன் வழக்கத்தை மாற்றி கோவர்தன மலையை வழிபடச் செய்தான். சினமுற்ற இந்திரன் பெருமழையைப் பொழிவிக்க, கோவர்தனத்தைக் குடையாகப் பிடித்து ஏழு நாட்களும் காப்பாற்றினான். இந்திரன் கிருஷ்ணனைத் துதித்தான். தேவ ஸுரபி வந்து கிருஷ்ணனைப் பணிந்து அவனை கோபாலர்களின் இந்திரனாக பதவி சூட்டியது. தேவர்கள் கோவிந்தன் என்று புகழ்ந்தார்கள். பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 7. நந்த கோபாலர் வருணனால் கடத்தப்பட்டது ஒருமுறை ஏகாதஶீ விரதம் முடித்து நந்த கோபர் காளிந்தி நதியில் நீராடச் சென்றார். வருண தேவனுடைய கட்டளைப்படி ஒரு தேவன் அவரைக் கடத்தி வருண லோகத்துக்குக் கொண்டு சென்று விட்டான். ஆம்பாடி மக்கள் கவலையுற்றபொழுது, கிருஷ்ணனும், பலராமனும் காளிந்தியில் குதித்து வருணாலயத்தை அடைந்தனர். வருணன் கிருஷ்ணனை நேரில் தரிசிக்க விரும்பியே அவ்விதம் கடத்தியதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அப்போது காளிந்தியைப் பார்த்த மக்கள் எல்லா உலகங்களையும் அதில் பார்த்தார்கள் பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 8. ராஸக் க்ரீடை வஸந்த காலத்தில் கிருஷ்ணனுடைய புல்லாங்குழல் கோபியர்களை மயக்கியது. எல்லா பெண்களும் கிருஷ்ணனோடு பிருந்தாவனம் சென்றனர். வீட்டுக்கு அனுப்ப கிருஷ்ணன் முயற்சித்தான். அவர்கள் போகவில்லை. கிருஷ்ணன் திடீரென்று மறைந்து விட்டான். அவர்கள் கிருஷ்ணனைத் தேடி அழுது அரற்றினர். மறுபடியும் அவர்கள் முன் தோன்றி, காளிந்தியில் அவர்களோடு நீராடி மகிழ்வித்தான். பக்தி யோகத்தை இவ்வாறு உலகிற்குக் காட்டினார். பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 9. நந்த கோபரை மலைப்பாம்பு விழுங்கியது தேவி காட்டில், மஹேஶ்வர பூஜை செய்து இரவை காளிந்தி நதிக்கரையிலேயே கழித்தனர். அப்போது ஒரு மலைப்பாம்பிடம் நந்த கோபர் சிக்கிக் கொண்டார். மற்றவர்கள் ஆனமட்டும் முயற்சித்து முடியாமல் நிற்க, கிருஷ்ணன் வந்து ஒரு உதை/ மிதி/ சவட்டு விட்டான். அந்த பாம்பு ஸுதர்ஶநன் என்கிற ஒரு தேவனாக மாறியது. அவன் அங்கிரஸ முனிவரால் ஶபிக்கப்பட்ட ஒரு வித்யாதரன். 10. அரிஷ்டாஸுரனை/ விருஷாஸுரனைக் கொன்றது கம்ஸனுடைய ஆளான அரிஷ்டாஸுரன் ஒரு காளை வடிவில் ஆம்பாடி வந்தான். கிருஷ்ணன் அவனைக் கொம்பைப் பிடித்து அடக்கிக் கொன்றான். ஜல்லிக் கட்டு 11. கேஶியைக் கொன்றது கம்ஸன் கேஶி என்பவனை ஆம்பாடி அனுப்பினான். குதிரை வடிவில் வந்த அவன் வாய்க்குள் கையைவிட்ட கிருஷ்ணன் அதைப் பெரிதாகும்படி செய்தார். அந்த அஸுரனும் இரத்த வாந்தி எடுத்து இறந்தான். அதனால் கிருஷ்ணன் கேஶவன் எனப்பட்டார். ஆதி கேஶவன் – திருவட்டாறு பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம் 12. வ்யோமாஸுரனைக் கொன்றது மாயாஸுரனுடைய மகன் வ்யோமாஸுரன்தான் கம்ஸன் கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பிய கடைசி அஸுரன். அவன் ஆடு உருவில் கோபர்களிடையே புகுந்தான். கிருஷ்ணன் அவனை ஒரு குஹைக்கு இழுத்துச் சென்று கொன்றான் பாகவதம் 10-ஆவது ஸ்கந்தம்