Перейти к содержимому

thirumakal sthuthi by sri agasthiyar at kollapuram thiruvarur dist tamil nadu

Balayogi Prajabathi

0:00 / 0:00

thirumakal sthuthi by sri agasthiyar at kollapuram thiruvarur dist tamil nadu

885 просмотров · 2 нед. назад
Balayogi Prajabathi
3 подписчика
885 просмотров · 2 нед. назад
மூவுலகம் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித் தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும் பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான் 2 கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டி லுறை கொள்கைபோல மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்த்தெந் நாளுங் கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய். 3 கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத் திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே எனவணக்கஞ் செய்வான் மன்னோ. 4 மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன் கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாம் காவல் பூண்டான் படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ. 5 மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும் கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோரும் வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும் அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள்நோக்கம் அடைந்துள்ளாரே. 6 செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும் எழின்மேனித் திருவே வேலை அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும் பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா. 7 என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்சலோடும் நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும் பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவண் மருவல் செய்யாள்.