நிலக்கடலை K1812 நடவு முதல் அறுவடை வரையிலான தொழில் நுட்பங்கள் Kadiri Lepakshi in Tamil Brittoraj
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
0:00 / 0:00
நிலக்கடலை K1812 நடவு முதல் அறுவடை வரையிலான தொழில் நுட்பங்கள் Kadiri Lepakshi in Tamil Brittoraj
147 734 просмотра · 5 л. назад
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
143 тыс. подписчиков
147 734 просмотра · 5 л. назад
K1812 நிலக்கடலை சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரையிலான நுட்பங்கள்.
Acharya N. G. Ranga Agricultural University ஆச்சார்யா N G ரங்கா வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி திரு நாயக் அவர்களின் Breeders விதைகள் பெற கீழே பல்கலைக்கழக நேரடி முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Account Name:
Principal Scientist (Groundnut) & Head, Agricultural Research Station,
Kadiri
A/c No.10639618665, SBI, Kadiri
IFSCode: SBIN0000849
Breeder Seed price per kg=Rs 155/-
please add Rs 59/- for bank charges to total amount
We produce Breeder seed
Rs 110 to 155/-kg
Kadiri Lepakshi
Seed rate is 40kg pods(32kg kernel)per acre
=155x40=Rs 6200/-per acre
Name:Dr. Kss Naiak Kathari Ground Nut
Mobile:9885192007
தனியார் விற்பனையாளர்
சேகர், வேலூர் 9000859046
----+++------++++-------+++----
00:00 - Intro
00:21 - அறிமுகம்
04:53 - வளர்ப்பு முறை
05:23 - அடி உரம்
07:58 - விதை நேர்த்தி
08:57 - நடவு
09:17 - இடுபொருள்
12:50 - நோய்க் கட்டுப்பாடு
16:01 - தேமோர் கரைசல்
21:18 - பூச்சி கட்டுப்பாடு
25:04 - குறிப்புகள்
🌺 நிலக்கடலை Kadiri Lepakshi 1812 சாகுபடி அட்டவணை 🌺
📌அனைத்து வகை நிலங்களிலும் அனைத்து காலங்களிலும் நடவு செய்ய ஏற்ற இரகம் கதரி லேபாக்ஷி -1812
📌வயது -112 நாட்கள்
📌விதை - 32 -34 கிலோ பருப்பு
📌நடவு இடைவெளி - வரிசைக்கு வரிசை 1 அடி x செடிக்கு செடி 1/2 அடி
📌அடி உரம் -
(வாய்ப்பு இருந்தால்) பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுவது நல்ல பலன்கள் தரும். ஒரு வித்திலை, இரு வித்திலை,எண்ணெய் வித்து, நறுமணப் பயிர்கள், சணப்பை, தக்கைப்பூண்டு என 20-30 கிலோ வரை கலந்து, விதைத்து, 40 ஆம் நாள் மடக்கி உழ வேண்டும்.
📌ஏக்கருக்கு 7 டிராக்டர் (7x800=5600kg) தொழு உரத்துடன்
70 கிலோ சாம்பல்,
40 கிலோ எலும்பு உரம்,
10 கிலோ பாஸ்போ பாக்டீரியா ,
10கிலோ பொட்டாஷ் பாக்டீரியா
1 கிலோ மெட்டாரைசியம்
கலந்து அடி உரமாக இட வேண்டும்.
📌ஊட்டமேற்றிய தொழு உரமாக கொடுப்பது நல்ல பலன்கள் கொடுக்கும்.
📌விதை நேர்த்தி செய்தல் - 1 கிலோ விதைக்கு 10கிராம் /10 மிலி சூடோமோனாஸ்
📌நடவு - 2 - 4 செமீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.
📌இடுபொருள் அட்டவணை
📌ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை தரை வழி ஒரு இடுபொருள் கொடுக்க வேண்டும்.
🥜 10 ஆம் நாள் - ஜீவாமிர்தம் -200 லி
🥜 20 - மீன் அமிலம் - 2 லி
🥜30 - மீன் அமிலம் 2 லி
🥜40 - ஜீவாமிர்தம் 200 லி
🥜50 -E.M கரைசல் -3 லி
🥜60 - மீன் அமிலம் 2லி + ரைசோபியம் 10 கிலோ
🥜70 - மீன் அமிலம் 2லி
🥜80 - ஜீவாமிர்தம் 200 லி + ரைசோபியம் 10 கிலோ
🥜90 - மீன் அமிலம் 2 லி
🥜100 - EM கரைசல் 3 லி + ரைசொபியம் 10
🥜110 - மீன் அமிலம் 2 லி
(பஞ்ச காவியம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
📌20,40 ஆம் நாட்களில் ஏக்கருக்கு 4 -10 கிலோ vam மணலுடன் கலந்து தூவ வேண்டும் அல்லது பாசன நீரில் கலந்து விட வேண்டும் அல்லது
📌20 , 40 ஆம் நாட்களில் களையெடுத்து மண் அணைக்கும் போது ரைசோபியம் 20 கிலோ 10 கிலோ vam கலந்து கொள்ள வேண்டும்.
📌களி மண் அமைப்பாக இறுக்கத்துடன் இருந்தால் ஜிப்சம் 200 கிலோ வரை கொடுக்கலாம்.
📌200 லி தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பு கலந்து தரைவழி 45, 60, 85 ஆம் நாளில் கொடுக்க வேண்டும்.
📌முடிந்தால் 60 ஆம் நாளில் மேலூரமாக தொழு உரத்துடன், சாம்பல் / பொட்டாஷ் பாக்டீரியா எலும்பு உரம் கலந்து கொடுக்கலாம்.
📌இலைவழி தெளிப்பு
5,15,25,35,45,55,65,75,85,95 ஆம் நாட்களில்
பஞ்ச காவியா 200 மிலி /10 லி நீர்
மீன் அமிலம் 100 மிலி / 10 லி நீர்
EM - 300 மிலி / 10 லி நீர்
📌தேமோர் கரைசல்
30, 37,44,51 ஆம் நாள் 500 மிலி /10 லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
📌மாதம் தோறும் சூடோ மோனாஷ் இலைவழி மற்றும் வேர்வழியாக கொடுக்க வேண்டும்.
📌சாறு உறிஞ்சும் பூச்சிக்கு - வெர்டி சீலியம் லக்கானி
📌புழுக்கள் - பெவரியா பேசியானா
75 மிலி /10 லி நீர்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram Groups