இதோ பெரிய குரு | THE ORIGINAL TUNE| FR.DENIS VAIZ
Mathinan Hits
0:00 / 0:00
இதோ பெரிய குரு | THE ORIGINAL TUNE| FR.DENIS VAIZ
29 421 просмотр · 3 года назад
Mathinan Hits
13,9 тыс. подписчиков
29 421 просмотр · 3 года назад
இப்பாடலின் ஒரிஜினல் மெட்டை வெளிக் கொணர வேண்டும் என்று இதனை எழுதி உருவாக்கிய திரு. மைக்கேல் திண்டுக்கல் அவர்களின் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்து பெற்று நமக்கு தந்த அருட்தந்தை டெனிஸ் வாய்ஸ் அவர்களுக்கு நன்றி.
தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடந்த சிறப்பு திருப்பலியில், பாடப்பட வேண்டிய இதோ பெரிய குரு பாடலை திருப்பலிக்கு முன்னதாக ஒரு பயிற்சியாக பாடி, அனைத்தும் (ஆடியோ உட்பட) சரிபார்க்க பட்டது.(11.06.2023).
அந்த பிரம்மாண்ட மேடையில், நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர், பாடகிகள், பல்வேறு இசை கருவிகளை இசைத்த இசைக் கலைஞர்கள், மூன்று பாடகர் குழுக்களை வழி நடத்திய மூன்று அருட்தந்தையர்கள், அனைத்தையும் ஒன்றிணைத்து வழி நடத்திய அருட் தந்தை டெனிஸ் வாய்ஸ்.....
அந்த பொன்னான அனுபவத்தை, தந்தையின் அனுமதியோடு, அனைவரும் மெய்மறந்து ரசித்து மனாதர பாராட்டிய தந்தையின் இசை ராஜாங்கத்தை உங்கள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
பாடல் &இசை
திரு. மைக்கேல் திண்டுக்கல்
பாடியவர்கள்
தூத்துக்குடி மறை மாவட்ட பாடகர் குழு மற்றும்
மறை மாவட்ட பங்கிற்கு இருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர் குழு
வழிநடத்தியவர்கள்
அருட்தந்தை மரிய ஜான் கோஸ்தா
அருட்தந்தை இரஞ்சித்குமார் கர்டோசா
அருட்தந்தை எட்வர்ட் பிரான்சிஸ்.
இசை இயக்கம்
அருட்தந்தை டெனிஸ் வாய்ஸ்
#இதோ பெரிய குரு
#IthoPeriaGuru
#FrDenisVaiz
#MathinanHits
பாடல் வரிகள்
இதோ பெரிய குரு வருகின்றார்
வருகின்றார் வருகின்றார் வருகின்றார்
இறைவனுக்குகந்தவர் வருகின்றார்
இறைவனுக்குகந்தவர் வருகின்றார்
*
இவருக்கிணையாக இறைச்சொல்லை
ஏற்று நடப்பவர் வேறில்லை
எனவே அவர் தான் கோத்திரத்தில்
இனிதே செழிப்புற ஆணையிட்டார்
*
எல்லா குலத்து மாந்தர்களின்
ஆசிர் ஆண்டவர் அவர்க்களித்தார்
அவரின் சிரசின் மேலே தம்
உடன்படிக்கைதனை நிலைக்க செய்தார்
*
தம் திருக்கரத்தின் ஆசிரால்
தற்பிரன் இவரை ஏற்றுக் கொண்டார்
மன்னவர் முன்னவர் புகழ் விளங்க
மகிமையின் முடியை அவர்க்களித்தார்
*
குருத்துவ பணியை நிறைவேற்றி
குவாலயமெங்கும் அவர் பெயரால்
நறுமணப் பலியை செலுத்திடவே
நல்கினார் பூரண குருத்துவமே
*