TPM Tamil Song 475 | En ullam nandriyaal niraindhay |என் உள்ளம் நன்றியால் நிறைந்தே
Samuel Sam
0:00 / 0:00
TPM Tamil Song 475 | En ullam nandriyaal niraindhay |என் உள்ளம் நன்றியால் நிறைந்தே
83 036 просмотров · 3 года назад
Samuel Sam
3,65 тыс. подписчиков
83 036 просмотров · 3 года назад
#tpmtamilsong475 #tpmtamilsong #என்உள்ளம்நன்றியால்நிறைந்தே
1. என் உள்ளம் நன்றியால் நிறைந்தே
என் தேவனில் மகிழ்ந்திடுதே
மாறிடா அடைக்கலம் நீரே! என்றும் என் தஞ்சமும் நீரே!
உம் சிறகதின் நிழலில், மறைத்தென்னைக் காத்தனீரே
பல்லவி
நீரே என் கீதமும் பெலனும்
நீங்கிடா மறைவிடம் நிழலும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனின் ஊற்றே
என்றுமென் புகலிடமே!
2. சேய் போல என்னையும் சுமந்தே
தாய் போல அரவணைத்தீரே
கானகமாம் இந்தப் புவியில், கலங்கியே தவித்ததாம் வேளை
கண்ணுறங்காதெனையே, கருத்துடன் காத்தனீரே — நீரே
3. மலை போல இன்னல்கள் பெருகி
அலை போல சீறி வந்திடினும்
அளவில்லா கிருபைகள் பகர்ந்தே, அசைந்திடாதெனையுமே ஸ்திரமாய்
அண்ணலே நிலைநிறுத்தி, அற்புத ஜெயமீந்தீரே -- நீரே
4. குருவே நீர் என்னையும் அழைத்தீர்
திரு சித்தம் செய்யவே இகத்தில்
களிமண்ணைப் போல உம் கரத்தில் கர்த்தனே கையளித்திடுவேன்
உருவாக்கிடும் எனையே, உந்தனின் திரு சாயலாய் --நீரே
5. எக்காளம் தொனித்திடும் நேரம்
இக்காலப் பாடுகள் தீரும்
ஏகிடுவேன் உந்தன் சமுகம், கண்டிடுவேன் உந்தன் வதனம்
ஏங்கிடுதென் உள்ளமே, ஆனந்த நாளதுவே -- நீரே
1. En ullam nandriyaal niraindhay
En Dheivanil magilndhidudhay
Maaridaa adaikkalam Neeray! Endrum en thanjamum Neeray!
Um siragadhin nilalil maraithennai kaathaneeray
Neeray en geedhamum, belanum
Neengidaa maraividam nilalum
Yeisuvay Neer endhan jeevanin oottray
Endrum en pugalidamay!
2. Sei poala ennaiyum sumandhay
Thaai poal aravanaitheeray
Kaanagaam indha puviyil, kalangiyay thavithadhaam veilai
Kannurangaa dhenaiyay, karuthudan kaathaneeray
3. Malai poala innalgal perugi
Alai poala seeri vandhidinum
Alavillaa kirubaigal pagarndhay, asaindhidaa-dhenaiyumay sthiramaai
Annalay nilai niruthi, arpudha jeyam eendheeray
4. Guruvay Neer ennaiyum alaitheer
Thiru sitham seiyyavay igathil
Kali mannai poala Um karathil Karthanay kai-alithiduvein
Uruvaakkidum enaiyay, Undhanin thiru saayalaai
5. Ekkaalam dhonithidum neiram
Ikkaala paadugal theerum
Yeigiduvein Undhan samugam, kandiduvein Undhan vadhanam
Yeingidudhen ullamay, aanandha naal adhuvay