நானும் கதையும் 🌿 | வேள்பாரியுடன் ஒரு வரலாற்றுப் பயணம் | Introduction
நானும் கதையும்
0:00 / 0:00
நானும் கதையும் 🌿 | வேள்பாரியுடன் ஒரு வரலாற்றுப் பயணம் | Introduction
387 просмотров · 12 дн. назад
நானும் கதையும்
76 подписчиков
387 просмотров · 12 дн. назад
நான் படிச்சு ரசிச்ச, என்னைச் சிந்திக்க வச்ச கதைகளை உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்த “நானும் கதையும்” சேனல்.
📖 நம்முடைய முதல் கதைப் பயணம் — வீரயுக நாயகன் வேள்பாரி!
எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவல், நம்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டின் வாழ்க்கை, அரசியல், பண்பாடு, மனித உறவுகள் நிறைந்த உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.
மூவேந்தர்களும் பொறாமைப்படும் அளவுக்குப் புகழ்பெற்ற பரம்பு நாட்டு மன்னன் வேள்பாரி!
அவனுடைய கொடைத்தன்மையைப் பற்றிக் கபிலர் புறநானூற்றில் பாடிய வரிகள்:
“பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே.”
வேள்பாரி எப்படி வாழ்ந்தான்? அவனுடைய பெருமைக்குக் காரணம் என்ன? மூவேந்தர்களின் அரசியலில் அவன் எப்படி வீழ்த்தப்பட்டான்?
இந்த நாவலை வாசிக்கும்போது நாமே அந்தக் காலகட்டத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படும்.
அதே நேரத்தில், கதையில் பேசப்படும் அரசியலும் சமூகக் கருத்துகளும் இன்றைய காலத்தோடும் தொடர்புபடுத்திச் சிந்திக்க வைக்கின்றன.
இந்தச் சுவாரசியமான கதையை என்னுடைய இயல்பான பேச்சு நடையில், உணர்வுகளோடும் கற்பனையோடும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
இது நம்முடைய முதல் கதைப் பயணம். இன்னும் பல கதைகளோடு தொடர்ந்து சந்திப்போம்!
❤️ கதைகள் பிடித்திருந்தால் Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
🌿 கதையோடு உங்க கற்பனையும் விரியட்டும்!
📚 நாவல்: வீரயுக நாயகன் வேள்பாரி
✍️ எழுத்தாளர்: சு. வெங்கடேசன்
🎙️ கதைப் பகிர்வு: யாமினி
📺 சேனல்: நானும் கதையும்
#நானும்கதையும் #வேள்பாரி #Velpari #VeeraYugaNayaganVelpari #TamilStorytelling #TamilPodcast #Kapilar #SangamLiterature #TamilHistory