Перейти к содержимому

தேவன் பிறந்தாரே | புதிய கிறிஸ்துமஸ் பாடல் 2025 | Christmas Song | GLADY SONGS | Tamil Christian Song

GLADY SONGS

0:00 / 0:00

தேவன் பிறந்தாரே | புதிய கிறிஸ்துமஸ் பாடல் 2025 | Christmas Song | GLADY SONGS | Tamil Christian Song

45 587 просмотров · 11 месяцев назад
GLADY SONGS
7,02 тыс. подписчиков
45 587 просмотров · 11 месяцев назад
#ThaguthiIlladhaIrundhum #JesusCalls #TamilChristianSong #ChristianWorship #TamilGospelSong #JesusLovesYou #FaithInChrist #ChristianDevotional #TamilWorshipSong #GodsGrace தேவன் பிறந்தாரே” என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புதிய தமிழ்க் கிறிஸ்துமஸ் பாடல். இந்த பாடல் இயேசுவின் பிறப்பு நமக்குத் தரும் அமைதியையும், அன்பையும், இரட்சிப்பின் நம்பிக்கையையும் பாடுகிறது. 🎧 பாடலை முழுமையாக கேட்டு, உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள். 👍 லைக் செய்யவும், 📢 நண்பர்களுடன் பகிரவும், 🔔 சப்ஸ்க்ரைப் செய்து ஆதரிக்கவும்! Lyrics, Tune & Music Arrangement, Instrumentation - Glady Vocals - Glady (voice refined and enhanced through AI technology) பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு தேவன் பிறந்தாரே தாய் மரியின் மடிமீதே  பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு தேவன் பிறந்தாரே தாய் மரியின் மடிமீதே  விண்ணின்று இறங்கி வந்து மண்ணில் பிறந்தாரே தேவாதி தேவனவர் மனுவாய் ஜனித்தாரே விண்ணின்று இறங்கி வந்து மண்ணில் பிறந்தாரே தேவாதி தேவனவர் மனுவாய் ஜனித்தாரே  பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு  பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு  ராஜாதிராஜனவர், வல்லமையின் தேவனவர்  பெத்தலையில் பிறந்திருக்கிறார்  சர்வலோக அதிபதி, நல்ல நீதிபதி பசுங்குடிலில் படுத்திருக்கிறார்  பாவங்களை மன்னிக்கும் அதிகாரங்கள் கொண்ட தேவபாலன் பிறந்திருக்கிறார்  சாத்தானின் சிரம்நசுக்க பாவத்தின் விலங்கொடிக்க  அன்பு தேவன் பிறந்திருக்கிறார்  பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு தேவன் பிறந்தாரே தாய்மரியின் மடிமீதே அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா ஆஆ அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆலோசனைக் கர்த்தரவர், நித்தியத்தின் ராஜனவர் உலகை மீட்க பிறந்திருக்கிறார் உன்னதத்தின் தேவனவர், ஆத்துமத்தின் நேசரவர் நம்மைக் காக்க பிறந்திருக்கிறார் எண்ணிலாத அற்புதங்கள் பெரும்பெரும் அதிசயங்கள் செய்யும் இறைவன் பிறந்திருக்கிறார் பாவத்தில் வீழ்ந்தவர்க்கு மீட்டு வாழ்வளிக்க பரிசுத்தர் பிறந்திருக்கிறார் பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு தேவன் பிறந்தாரே தாய்மரியின் மடிமீதே இரக்கமுள்ள நண்பரவர், தூயகத்தின் அன்பரவர் உயிரைக் கொடுக்க பிறந்திருக்கிறார் இஸ்ரவேலின் மேய்ப்பரவர், யூதராஜ சிங்கமவர் ஆயனாக பிறந்திருக்கிறார் விழுகின்ற நம்மைத் தாங்க இறை சித்தம் அவரில் ஓங்க இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் தன்னையே பலியாக்க உலகத்தின் மீட்ப்புக்காக ஆண்டவர் பிறந்திருக்கிறார் பூவே நீ பாடு பூங்காற்றின் இசையோடு தேவன் பிறந்தாரே தாய்மரியின் மடிமீதே 💒 என் சிறிய முயற்சிகள் தேவனின் நாமத்திற்கு மகிமையையும் உங்களுக்கு ஆசீர்வாதத்தையும் தரட்டும். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக! ✨ 💒 May these humble efforts touch your heart, bring glory to God’s name, and be a blessing in your life. May the Lord richly bless you! ✨