Перейти к содержимому

அதிசய கிராமம் மெய்வழிச்சாலை ஆன்மீக பூமி

Velu Life Travel

0:00 / 0:00

அதிசய கிராமம் மெய்வழிச்சாலை ஆன்மீக பூமி

1 098 просмотров · 1 дн. назад
Velu Life Travel
1 тыс. подписчиков
1 098 просмотров · 1 дн. назад
🌿 ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து #மனிதர்கள் ஒன்றாக #அன்பாக #வாழும் அற்புதக் #கிராமம்...... புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை — மனிதநேயம், ஆன்மிகம், எளிமை இணைந்த ஓர் அனுபவப் பயணம்! #மெய்வழிச்சாலை இலுப்பூர் வட்டம், அன்னவாசல் அருகில், புதுக்கோட்டை மாவட்டம். பயண நாள்: 12.10.2026, திங்கட்கிழமை. ஜாதி இல்லை… மத வேறுபாடு இல்லை… ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் இல்லை… இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்க்கை 🌿💧💖 இப்படியொரு வாழ்க்கை முறையை இன்றைய நவீன உலகில் கற்பனை செய்து பார்ப்பதே வியப்பாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், இலுப்பூர் அருகே உள்ள மெய்வழிச்சாலை என்ற கிராமம், தனித்துவமான ஆன்மிகக் கொள்கைகளையும் வாழ்க்கை நெறிகளையும் இன்றளவும் பின்பற்றி வருவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வெவ்வேறு ஜாதிகளிலும் மதங்களிலும் பிறந்த மனிதர்கள், தங்களுடைய பிறப்பின் அடையாளங்களைக் கடந்து, ஒரே ஆன்மிகக் கொள்கையின்கீழ் ஒன்றிணைந்து வாழும் இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதே ஒரு வித்தியாசமான அனுபவம். #புதுக்கோட்டையில் பிரம்ம ஞான சபையின் தமிழ் சம்மேளனப் பாட வகுப்புகள் நிறைவடைந்த பின்னர், 12.10.2026 திங்கட்கிழமை மாலையில், இந்தச் சிறப்புமிக்க கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பேராசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, மதுரை விமான நிலைய உயர் அதிகாரி கே. பாஸ்கரன், எழுத்தாளரும் பேச்சாளருமான எம். சத்தியமூர்த்தி ஆகியோருடன் அடியேனும் இணைந்து இந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டேன்....... அங்கு சென்றபோது, மெய்வழிச்சாலையின் வரலாறு, அதன் தனித்துவமான வழிபாட்டு முறைகள், எளிமையான வீடுகள், இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.