நாத விந்துகள் (பழனி திருப்புகழ்) | Naatha Vindhugal [Murugan Film]
குரு குல தேசம் (Guru Kula Desam)
0:00 / 0:00
நாத விந்துகள் (பழனி திருப்புகழ்) | Naatha Vindhugal [Murugan Film]
403 просмотра · 9 дн. назад
குரு குல தேசம் (Guru Kula Desam)
187 подписчиков
403 просмотра · 9 дн. назад
═════════════════════════════════════════════════════════════
🕉️ குரு குல தேசம் | GURUKULA DESAM PRESENTS
═════════════════════════════════════════════════════════════
நாத விந்து கலாதி (பழனி திருப்புகழ்) | Naatha Vindhugal [Cinematic Thiruppugazh Film]
அருளாளர்: அருணகிரிநாதர் சுவாமிகள் (Saint Arunagirinathar)
═════════════════════════════════════════════════════════════
📜 பாடல் வரிகள் (FULL TAMIL LYRICS)
═════════════════════════════════════════════════════════════
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஞான பண்டித சாமீ நமோ நம வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்
சேத தண்ட விநோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
═════════════════════════════════════════════════════════════
📖 பொருள் விளக்கம் (DEVOTIONAL MEANING & ESSENCE)
═════════════════════════════════════════════════════════════
நாதம், விந்து முதலிய கலைகளின் வடிவானவரே, வேத மந்திரங்களின் உருவானவரே, ஞானத்தில் சிறந்தவரே, சிவகுமாரரே என்று முருகப்பெருமானை "நமோ நம" எனப் பலமுறை வணங்கி அருள் வேண்டும் பழனித் திருப்புகழ். தானம், பூஜை, ஓதுதல், நல்லொழுக்கம், குருவின் திருவடிச் சேவை ஆகியவற்றை மறவாத வாழ்வைத் தர வேண்டும் என்றும், ஆவினன்குடியில் வாழும் பெருமாளே அருள் தருக என்றும் பிரார்த்திக்கிறது.
═════════════════════════════════════════════════════════════
🌐 GURUKULA DESAM DIGITAL SANCTUARY
Official Educational & Devotional Archive
Explore complete hymns, commentaries & courses:
https://gurukuladesam.com
#GurukulaDesam #Murugan #Thiruppugazh #DevotionalTamil #TamilHymns