வான்மழை - 100* ஆம் விழிப்புணர்வு கருத்தரங்கில், வனம்
Sky Media
0:00 / 0:00
வான்மழை - 100* ஆம் விழிப்புணர்வு கருத்தரங்கில், வனம்
68 просмотров · 2 месяца назад
Sky Media
5,24 тыс. подписчиков
68 просмотров · 2 месяца назад
அன்புடையீர்
வணக்கம்
வாழ்க வளமுடன்
31.07.2026 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வனம் இந்தியா பவுண்டேசனின், வான்மழை - 100 ஆம் விழிப்புணர்வு கருத்தரங்கில், வனம் ஆன்மீகம் மற்றும் இலக்கியத்துறை இயக்குநர், ஞானபாரதி திரு.வெ.அனந்தகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலன் வேண்டி தவம் இயற்றினார். தலைமை விருந்தினர் URC Construction மற்றும் CII-Tamilnadu தலைவர் திரு.URC தேவராஜன் அவர்கள் தலைமையுரையாற்றினர். சிறப்பு விருந்தினராக, Partner of CD TechnoTex LLP மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர், திரு.D.வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். செயற்பாட்டாளராக, Sadhguru Sannadhi Organic Farms, திரு.V.T.வள்ளுவன் அவர்கள் கலந்துகொண்டு அனுபவ உரையாற்றினார். பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு குழுவினர் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் குழுவினருக்கு, வனம் அமைப்பின் சார்பில் விருது வழங்கி கெளரவித்தனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும், அய்யம்பாளையம் திருமதி.கோமதி, வேட்டுவபாளையம் திரு.பிரபாகரன் மற்றும் கண்டியன்கோவில் திரு.மோகன்ராஜ் ஆகியோருக்கு “நம்மாழ்வார் விருது” மற்றும் ராம்ராஜ் காட்டன், தி சென்னை சில்க்ஸ் பரிசு கூப்பன்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு, ராம்நெய் மற்றும் தங்கலட்சுமி ஜூவல்லரி சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டது. தலைவர், சுவாதி திரு.K.சின்னசாமி, செயல்தலைவர் திரு.K.பாலசுப்பிரமணியன் மற்றும் இணைசெயலாளர் திரு.A.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வழங்கினார்.
நன்றி
TMS, வனம் ஊடகத்துறை