வவுனியா சிவன் கோவில் அம்பாள் உற்சவத்தின் இரதோற்சவம் -13.08.2026
வவுனியா கோவில்கள் и VAVUNIYA TUBE
0:00 / 0:00
வவுனியா சிவன் கோவில் அம்பாள் உற்சவத்தின் இரதோற்சவம் -13.08.2026
167 просмотров · 2 недели назад
வவுனியா கோவில்கள் и VAVUNIYA TUBE
167 просмотров · 2 недели назад
#வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய இரதோற்சவம் பக்திபூர்வமாக நடைபெற்றது
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான *இரதோற்சவம் இன்று (13.08.2026) வியாழக்கிழமை* வெகு சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
இதன்போது அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்பாள் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரதோற்சவத்தை முன்னிட்டு வவுனியா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து, பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆலய வீதிகள் எங்கும் பக்தர்களின் *“அரோகரா”* கோஷம் முழங்க, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் நேர்த்திக்கடன்கள் இடம்பெற்றன.
அம்பாள் மகோற்சவத்தின் இரதோற்சவம் பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.