கந்திலிசந்தை முறைகேட்டை முடிவுக்கு கொண்டுவந்த லீகல்ரைட்ஸ்!.கலெக்ஷன் கஜாமீதுநடவடிக்கை எடுக்ககோரிக்கை.
United Legal Right Organization⚖️Tirupattur Dt
0:00 / 0:00
கந்திலிசந்தை முறைகேட்டை முடிவுக்கு கொண்டுவந்த லீகல்ரைட்ஸ்!.கலெக்ஷன் கஜாமீதுநடவடிக்கை எடுக்ககோரிக்கை.
48 просмотров · 12 дн. назад
United Legal Right Organization⚖️Tirupattur Dt
16 подписчиков
48 просмотров · 12 дн. назад
கந்திலி சந்தை முறைகேட்டை முடிவுக்கு கொண்டு வந்த லீகல் ரைட்ஸ்!. கலெக்ஷன் கஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியில் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெற்று வரும் நிலையில் சந்தை மைதானம் அமைந்துள்ள இடம் பாரத கோவில் நிலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அறநிலையத்துறை சார்பில் சந்தை மைதானத்தில் கூடும் சந்தையில் சுங்க வசூல் செய்ய ஏலம் விடுவது வழக்கம். 2025 - 2026 ஏலம் எடுத்த நபரின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏலம் விட கால தாமதம் ஆன நிலையில் நேரடியாக அறநிலையத்துறை அலுவலர்கள் மூலம் சுங்க வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அறநிலையத்துறை அலுவலர்கள் யாரும் முறையாக வசூல் செய்யாமல் முறைகேடாக கந்திலி பகுதியில் உள்ள கஜா என்ற கஜேந்திரன் மூலம் வாரம் 1 லட்சத்திற்கு மேல் வசூல் செய்து விட்டு அரசாங்க கணக்கிற்கு 15 ஆயிரம் வசூல் ஆனது என்று கணக்கு காட்டி வருகின்றனர். வாராவாரம் லட்ச கணக்கில் கொள்ளை அடித்து வந்த நிலையில் Legal Rights Organization - Asia அமைப்பின் சார்பில் இது குறித்து தட்டி கேட்டு முறைகேட்டை தடுத்து நிறுத்தி உள்ளது.
இந்த முறைகேடுக்கு துணை போன அறநிலையதுறையில் பணியாற்றி வரும் செல்வராஜ் மீது இது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
Legal Rights Organization - Asia முயற்சியால் வரும் 11ம் தேதி ஏலம் விடப்படும் என்று தகவல் அளித்துள்ளனர் என்பதை இதன் மூலம் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
R.விமல்ராஜ்
மாவட்ட தலைவர்
ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் - ஆசியா.
திருப்பத்தூர் மாவட்டம்.#tirupattur