Перейти к содержимому

Thalattu 42- Kaaduvetti Naadaki|| Visalakshi Palaniappan thallattu || Nagarathar Aachi's World

Nagarathar Aachi's World

0:00 / 0:00

Thalattu 42- Kaaduvetti Naadaki|| Visalakshi Palaniappan thallattu || Nagarathar Aachi's World

6 497 просмотров · 5 лет назад
Nagarathar Aachi's World
18 тыс. подписчиков
6 497 просмотров · 5 лет назад
#chettinadthalattu #NagaratharAachi'sWorld #nagaratharaachisworld #traditionalthalattu #KaaduvettiNaadaki #aachisworld #thallattu Hello Friends Vanakkam n welcome back to our Nagarathar Aachi's 🌍 Today's video about Traditional chettinad thalattu by Mrs. Visalakshi Palaniappan, Trichy Song : Kaaduvetti Naadaki ஆராரோ ஆரிரரோ............ காடு வெட்டி நாடாக்கி கள்ளர் எல்லாம் உள்ளமர்த்தி நாடுபெற்று வாராக ராசமுடி ஐயாக்க வெற்றி பெற்று வாராக வீரமுடி ஐயாக்க காட்சி பெற்று வாராக கருணரோட ஐயாக்க தங்கத்தினால் பாலம் கட்டி தனி வைரக்கல் பாவி தங்கத்துரை உங்கள் ஐயா தானம் பண்ணும் தெப்பம் இது பொன்னினால் பாலம் கட்டி பொடி வைரக்கல் பாவி வெள்ளைத் துரை உங்கள் ஐயா வேட்டி தப்பும் தெப்பமிது மதுரையிலே மண்ணெடுத்து மணியாச்சி எல்லையிலே வீடு கட்டி எதிர்விலக்கு செய்து உங்கள் ஐயா எடுத்தாரோ மேல்வீடு மேல்வீடாம் கீழ்வீடாம் போகவர ரஸ்தாவாம் சவுக்கை மெழுகி உங்கள் ஐயா சாதிலிங்க பாய் போட்டு சாய்ந்து கணக்கெழுதும் சந்திரரோ உங்கள் ஐயா ஆத்திலே தலைமுழுகி உங்கள் ஐயா அக்கரையில் சிக்குணர்த்தி சாப்பிட்டுக் கைகழுவி தாம்பூலம் தரித்திருந்து கோர்ட்டு திறந்து குறிச்சி மேல் உட்கார்ந்து வக்கீலுக்கு சேதி செல்லும் உங்களய்யா அஷ்ட பிராமணரோ சந்திராந்தி மேடையிலே உங்களய்யா தருமர் கதை கேட்கையிலே தர்மர் கதை நிறுத்தி தானுரைக்க வந்த கண்ணோ முத்து முத்து செங்கேணி முத்தமெல்லாம் கொத்தலரி சுற்றி வந்து பூவெடுத்த சுந்தரரோ உங்கள் ஐயா பச்சை பச்சை செங்கேணி பக்கமெல்லாம் கொத்தலரி பார்த்து வந்து பூவெடுத்த பரமரோ உங்கள் ஐயா காரைக்கால் பட்டணமாம் என் கண்ணே கல்லிழைத்த மாளிகையாம் களைத்தோர்க்கு அன்னமிடும் கருணரோ உங்கள் ஐயா புதுச்சேரி பட்டணமாம் என் கண்ணே பொன் விளையும் மாளிகையாம் போவோர்க்கு அன்னமிடும் புண்ணியவார் உங்கள் ஐயா சவுக்கை மெழுகியல்லோ என் கண்ணே சந்தனத்தால் கோலமிட்டு சாதிலிங்க பாய்விரித்து என் கண்ணே சாய்ந்து கணக்கெழுதும் சந்திரரோ உங்கள் ஐயா கூடம் மெழுகியல்லோ என் கண்ணே குங்குமத்தால் கோலமிட்டு குங்கிலிய பாய்விரித்து குந்தி கணக்கு எழுதும் கோவிலனார் உங்கள் ஐயா வெள்ளி குத்தோலை வெண்கல மைக்கூடு விரசாய் கணக்கெழுதும் வீமரோ உங்கள் ஐயா சாரக்குருத்தோலை தஞ்சாவூர் மை கூடு சாய்ந்து கணக்கெழுதும் தருமாரோ உங்களையா சித்தூருத்தட்டானாம் சிதம்பரத்து ஆசாரி சித்துளியும் இல்லாமல் செய்து வந்தான் பொன்னூஞ்சல் மதுரைநகர்த் தட்டானாம் வாழ்மதுரை ஆசாரி வாய்ச்சுளியும் இல்லாமல் வகுத்து வந்தார் பொன்னூஞ்சல் இப்பெரிய கட்டிலுக்கும் இவனுடைய ஊஞ்சலுக்கும் என்ன தந்தார் ஐயாக்கள் நாலுவிரல் மோதிரமும் நயமான கல்லொளியும் ஐந்து விரல் மோதிரமும் அழகான கல்லொளியும் பத்து விரல் மோதிரமும் பதக்கத்தால் கல்லொளியும் போதக் கொடுப்பார்கள் பிள்ளையுடைய ஐயாக்கள் மகிழக் கொடுப்பார்கள் மஞ்சனோட ஐயாக்கள் பாட்டனார் எல்லையிலே பட்டு வந்து விக்குதுன்னு பட்டு விலை மதிக்கும் பாண்டியரோ உங்கள் ஐயா முப்பாட்டன் எல்லையிலே முத்து வந்து விக்கிதுன்னு முத்து விலை மதிக்கும் முடிமன்னர் உங்கள் ஐயா குங்குமக் கட்டிலிலே குந்தியிருந்து சேதி சொன்னால் கோவில் தளுகை வரும் உனக்கு கொல்லத்து தீர்த்தம் வரும் சந்தன கட்டிலிலே உங்கள் ஐயா சாய்ந்திருந்து சேதி சொன்னால் சாமி தளுகை வரும் உனக்கு சங்கரனார் தீர்த்தம் வரும் ஆராரோ....... #tamillullaby #lullaby #visalakshiachi #aachithalattu #visalakshipalaniappan #shanmuganathapuramachi #chettinaduthalattu #thalattuachi #nagaratharthalattu #nagarathar #traditionalthalattu #chettinadthalattu hope u all enjoy watch till end like n share with ur family n friends thanks for the support love u all