🔴LIVE வெல்லும் சனநாயகம்! திருச்சி VCK மாநாடு! | Thirumavalavan
Vikatan TV
0:00 / 0:00
🔴LIVE வெல்லும் சனநாயகம்! திருச்சி VCK மாநாடு! | Thirumavalavan
74 351 просмотр · Трансляция закончилась 2 г. назад
Vikatan TV
3,78 млн подписчиков
74 351 просмотр · Трансляция закончилась 2 г. назад
#VCK #Thirmavalavan #Trichy #TrichyVCKMaanadu #MKStalin #Vaiko
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் இன்று திருச்சி அடுத்த சிறுகனூரில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும் நிலையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு பேரூரை வழங்குகின்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கவுள்ளதாகவும், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ எம்.எல் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா போன்ற இந்தியா கூட்டணித் தலைவர்களும், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தமிழ்நாட்டு தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
வெல்லும் ஜனநாயகம் எனும் இம்மாநாட்டை முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சித் தலைமையின் அகவை 60 மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம், சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 2 முதல் 3 லட்சம் பேர் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு திடலின் பிரதான நுழைவு வாயில் முந்தைய நாடாளுமன்ற கட்டிட வடிவிலும், இருபுறமும் உள்ள பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில்களில் திருமாவளவன், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோருடன் புத்தர் படமும் இடம்பெற்றுது. நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ளே நுழையும் தொண்டர்களை பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் சிலையும் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. தலைவர்கள் உரையாற்றும் மேடை புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 அடி நீளத்திலும் 50 அடி உயரத்திலும் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது போன்று பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள் விகடனுடன்!
Live Handlings : Shayam Kumaran
Channel Manager : kamali Priya kamaraj
Asst. Channel Head : Hassan Hafeezh
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...