அண்ணாமலை போல் யாரும் இல்லை! - WTL பெண் தலைவர்கள் பேச்சு | Annamalai | We The Leaders
The Ignite Tamil
0:00 / 0:00
அண்ணாமலை போல் யாரும் இல்லை! - WTL பெண் தலைவர்கள் பேச்சு | Annamalai | We The Leaders
22 455 просмотров · 1 день назад
The Ignite Tamil
21,3 тыс. подписчиков
22 455 просмотров · 1 день назад
We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. அண்ணாமலை, அக்டோபர் மாதத்தை மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி, கோயம்புத்தூரில் Dr. APJ Abdul Kalam Centre for Ethics and Politics என்ற புதிய மையத்தைத் தொடங்கியுள்ளார்.
அரசியலில் நேர்மையும் அறநெறியும் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் செயல்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 100 பெண் தலைவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், பயிற்சி பெறும் பெண்கள் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் வகையில் தயார்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் திரு. அண்ணாமலை பற்றியும், பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதற்காக அவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பெண்களின் அரசியல் கனவுகளுக்கு புதிய பாதை அமைக்குமா இந்த முயற்சி? அண்ணாமலை குறித்தும், கலாம் சென்டர் முன்னெடுப்பு குறித்தும் பெண்கள் கூறிய முழுமையான கருத்துகளைக் காண இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்!
#Annamalai #WeTheLeaders #APJAbdulKalam #WomenEmpowerment #TamilPolitics #BJP #KalamCentre