Перейти к содержимому

tiruccERai - pirATTi with M.S.Subbulakshmi

Vasu Devan

0:00 / 0:00

tiruccERai - pirATTi with M.S.Subbulakshmi

18 945 просмотров · 13 лет назад
Vasu Devan
4,05 тыс. подписчиков
18 945 просмотров · 13 лет назад
At 0:15, பிராட்டியின் திருஸந்நிதியை ஸேவிக்கும் பேறு பெறுகின்றோம். At 1:08, "கோலமாமலர்ப்பாவை"யின் பொலிவையும், காந்தியையும், எழிலையும், ஸௌந்தர்யத்தையும், லாவண்யத்தையும் ஸேவித்தவுடனே அவன் "சுவையன்" என்பது தன்னடையே தெள்ளத்தெளிவாகின்றது. இதை வலியுறுத்தும் வகையில் ஆழ்வாரும் "சுவையன்" என்ற திருச்சொல்லுக்கு அடுத்து அருளிச்செய்த திருச்சொல் "திருவின் மணாளன்"! At 1:26, "பூவின்மிசை நங்கை" திருஊஞ்சலில் வீற்றிருக்கும் தோரணையை ஸேவித்தவுடன் இவள்தான் நமக்கு புகலிடம் என்று உடனே புலப்படுகின்றது. ஸ்வாமி தேஶிகனின் திருவாக்கு "நிஜபரம் நிர்ப்பர: நிர்ப்பய: அஸ்மி" ப்ரத்யக்ஷமாகின்றது. At 1:58, பிராட்டியின் திருக்கண்களும், திருமுகமும், கருணையயும், வாத்ஸல்யத்தையும் வர்ஷிக்கின்றன. திருப்பவளம் நம்மைப்பார்த்து களிப்புற்று விகஸிக்கின்றது. நம்மை ரக்ஷித்து, எல்லாவற்றையும் நமக்கு அனுக்ரஹிக்க ஸித்தமாக இருக்கின்றாள் என்பது ப்ரத்யக்ஷம். ஸ்வாமி பராஶர பட்டரின் ஸ்ரீஸூக்தி "aiSvaryam aksharagatim paramam padam vA" நம் நெஞ்சைத்தழுவுகின்றது. At 2:38, "கடிமாமலர்ப்பாவையின்" திருமார்பில் "சுவையன்" நித்யவாஸம் செய்வதை ஸேவிக்கும் பேறு பெறுகின்றோம். இது அவனுடைய "அகலகில்லேன்"! At 3:19, நம்மை ரக்ஷிக்கும் திருக்கரங்களை மிக அருகே ஸேவிக்கும் பாக்யம். At 5:34, திருஊஞ்சலில் அசைந்து, அசைந்து ஆடும் திருக்கோலம் பரம வைபோகம். At 2:01, 7:41 and 8:01, பிராட்டியின் திருப்புருவங்களை மிக அருகில் (stunning close-ups) ஸேவிக்கும் பேறு பெறுகின்றோம். "yad bhrUbhanagA: pramANam sthira cara racanA tAratamyE murArE:" என்னும் ஸ்ரீபட்டரின் திருவாக்கு நம் மனத்தை வருடுகின்றது. சென்ற வாரம் ஸர்வேஶ்வரனை ஸேவிக்கும் பேறு பெற்றோம். இன்று ஜகன்மாதாவை ஸேவிக்கும் பேறு. இவள் "மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள்" — அதனால் அவன் "செந்தாமரைக்கண்ணன்"! இவள் "இன்னமுதத்திருமகள்" — அதனால் அவன் "அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்"! இவள் "nIlatOyata madyastA vidyullEkEva bhAsvarA" என்றபடி கார்முகிலுக்கு ஒளி கூட்டும் மின்னல் கீற்று — அதனால் அவன் "பொற்சுடர்! இவள் "கோலமலர்ப்பாவை" — அவன் "சுவையன்"! அநுரூப தாம்பத்யம் இங்கு ப்ரத்யக்ஷம்!