"முக்கடல் குமரியின் புதல்வனே" தேவசகாயம் பிள்ளை பாடல் l Devasahayam Pillai song
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
0:00 / 0:00
"முக்கடல் குமரியின் புதல்வனே" தேவசகாயம் பிள்ளை பாடல் l Devasahayam Pillai song
27 735 просмотров · 4 г. назад
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
61,5 тыс. подписчиков
27 735 просмотров · 4 г. назад
#devasahayam_pillai_song
===================================
SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
===================================
முக்கடல் குமரியின் புதல்வனே
முத்திப்பேறு பெற்ற எங்கள் முதல்வனே
எங்கள் மனங்களை ஆண்டு நின்று
இறை அருள்தனை பரிந்துரைத்திடும் தேவசகாயமே
திருமுழுக்கு பெற்றவரே திருமறையினை ஏற்றவரே
மணக்கோலம் பூண்டவரே மக்கள் மனங்களை ஆண்டவரே
தேவசகாயமே... தேவசகாயமே... தேவசகாயமே... தேவசகாயமே...
ஏ.. ஏ.. ஏ.. ஏ.. ஏ..
ஹே.. ஹே.. ஹே.. ஹே..
1. நாஞ்சில் நாட்டவரே நட்டாலம் பிறந்தவரே
மனிதருள் மாணிக்கமே மங்காத அகல்விளக்கே..
அரசவை பணியும் ஆலய பணியும்
அகமாறு ஏற்ற அன்பரே
யோபுவின் வாழ்வினை தளபதியார் சொல்லிட
நற்செய்தி ஏற்ற நல்லவரே
தடைகள் எல்லாம் தகர்த்தெறிந்து
நிந்தை செய்வோரின் சிந்தனை மாற்றி
கிறிஸ்துவின் சீடரானீர் கிறிஸ்தவ வாழ்வுமாநீர்
தேவசகாயமே... தேவசகாயமே... தேவசகாயமே... தேவசகாயமே...
2. மரணத் தண்டனையை அரசனும் அறிவிக்கவே
எருமைமேல் ஊர்வலமாய் எண்ணற்ற ஊர்களிலே..
கொடியவர் கொடுமை கொடுந்துயர் தணியும்
நம்பிக்கை உறுதி கொண்டவரே
எளியவர் வாழ்விலே ஏற்றங்கள் கண்டிட
நல்லவைகள் எடுத்துச் சொன்னவரே
உரிமைக்காக உயிர் துறந்து
நீதிக்காக உண்மை பகிர்ந்து
உண்மைக்கு உயிராநீர் உலகிற்கு ஒளியாநீர்
தேவசகாயமே... தேவசகாயமே... தேவசகாயமே... தேவசகாயமே...
===================================
SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
===================================