Перейти к содержимому

அருள்மிகு சபாநாயகர் திருக்கோவில் l தில்லை l Thillai l காவிரி வடகரை தேவார தலம் - 1 l சிதம்பரம்

போகிற வழிக்கு புண்ணியம்

0:00 / 0:00

அருள்மிகு சபாநாயகர் திருக்கோவில் l தில்லை l Thillai l காவிரி வடகரை தேவார தலம் - 1 l சிதம்பரம்

148 просмотров · 3 года назад
போகிற வழிக்கு புண்ணியம்
26,7 тыс. подписчиков
148 просмотров · 3 года назад
திருநாவுக்கரசர் தேவாரம் கோயில் (சிதம்பரம்) | போகிற வழிக்கு புண்ணியம் l Pora Vazhikku Punniyam l போற வழிக்கு புண்ணியம் l Pogira Vazhikku Punniyam Location : https://goo.gl/maps/1CziePYMggZYVEN79 பாடல் எண் : 1 அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. பாடல் எண் : 2 அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன் பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. பாடல் எண் : 3 அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர் எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. பாடல் எண் : 4 அல்ல லென்செயும் அருவினை யென்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. பாடல் எண் : 5 ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் நான்நி லாவி யிருப்பனென் னாதனைத் தேன்நி லாவிய சிற்றம் பலவனார் வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே. பாடல் எண் : 6 சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே. பாடல் எண் : 7 ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னாரிளை யார்விட முண்டவெம் அருத்த னாரடி யாரை யறிவரே. பாடல் எண் : 8 விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்நி றைந்த கடிபொழி லம்பலத் துள்நி றைந்துநின் றாடு மொருவனே. பாடல் எண் : 9 வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம் வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன் தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. பாடல் எண் : 10 நாடி நாரணன் நான்முக னென்றிவர தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. பாடல் எண் : 11 மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. திருஞானசம்பந்தர் தேவாரம் கோயில் (சிதம்பரம்) செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.  திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை 3.1 கோயில் (சிதம்பரம்) பண் - காந்தாரபஞ்சமம் ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடினாயருளாய் சுருங்கஎ தொல்வினையே. கொட்டமேகம ழுங்குழ லாளொடு கூடினாயெரு தேறினாய் நுதல் பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை நல்லவர்பிரி யாதசிற் றம்பலம் இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ. நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார் சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழக் கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே. கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோலவாண்மதி போல முகத்திரண் டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான் கம்பலைத்தெழு காமுறு காளையர் காதலாற்கழற் சேவடி கைதொழ அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.  தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர் தூமணிமிட றாபகு வாயதோர் பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழ இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே. ஆகந்தோயணி கொன்றை யாய்அனல் அங்கையாய் அம ரர்க்கம ராஉமை பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம் |மன்னினாய்மழு வாளினாய் அழல் நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே. சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்கவார்குழை யாய்திக ழப்படும் வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள் ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம் அங்கையாற்றொழ வல்லடி யார்களை வாதியாதகலுந் நலியாமலி தீவினையே. வேயினார்பணைத் தோளியொ டாடலை வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே தீயினார்கணை யாற்புர மூன்றெய்த செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம் மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே. தாரினார்விரி கொன்றை யாய்மதி தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னுட் சீரினால்வழி பாடொழி யாததோர் செம்மையாலழ காயசிற் றம்பலம் ஏரினாலமர்ந் தாயுனசீரடி யேத்துதுமே. வெற்றரையுழல் வார்துவ ராடைய வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின் மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார் கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங் காதலாற்கழற் சேவடி கைதொழ உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே. நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறைவல்ல ஞானசம் பந்தன் ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள் ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத் தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே. சுந்தரர் தேவாரம் கோயில் (சிதம்பரம்) மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.