Перейти к содержимому

மட்டக்களப்பு கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற தீமிதிப்பு.!

போரதீவுப்பற்று செய்திகள்

0:00 / 0:00

மட்டக்களப்பு கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற தீமிதிப்பு.!

272 просмотра · 3 месяца назад
போரதீவுப்பற்று செய்திகள்
117 подписчиков
272 просмотра · 3 месяца назад
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, கோவில்போரதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பு (பூ மிதிப்பு) வைபவம் இன்று (30.05.2026) சனிக்கிழமை அதிகாலை மிக விமசையாக நடைபெற்றது. ​இவ் ஆலயத்தின் உறௌசவ திருச்சடங்கானது கடந்த (23.05.2026)ஆம் திகதி ஆரம்பமாகின. பல நாட்கள் கடுமையான விரதமிருந்து காப்புக்கட்டிய பெருமளவிலான பக்தர்கள், ஆலய முன்றலில் திரண்டு அம்மனை வழிப்பட்டனர். ​உற்சவத்தின் முக்கிய அங்கமான தீ மூட்டும் நிகழ்வு நேற்று (29.05.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் "அம்மா... தாயே..." என்ற பக்தி கோஷங்களை எழுப்ப, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்திற்கு முறைப்படி தீ மூட்டப்பட்டது. ​அதனைத் தொடர்ந்து, இன்று(30.05.2026) சனிக்கிழமை அதிகாலை 1,000-ற்கும் மேற்பட்ட அடியார்கள் பக்திபூர்வமாக எரியும் அக்னி குண்டத்தில் இறங்கி, அம்மனுக்குத் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். ​நாளை (31.05.2026) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அம்மாளின் பாரம்பரிய திருக்குளித்தி (குளிர்ச்சி) நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் மட்டக்களப்பு மற்றும் அதன் நாற்புறங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்று வருகின்றனர். #porativupattunews#kannakiamman#kovil#kovilporativunews#tamilnews#todaynews#vellavelinews#batticaloanews#srilankanews#Amparanews#Trincomaleenews#jaffnanews#