கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில்
ஆன்மீகத்துடன் நட்பு
0:00 / 0:00
கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில்
1 999 просмотров · 4 года назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
1 999 просмотров · 4 года назад
கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில்
மூலவர் : அவனீஸ்வரர்
ஊர்: கோபுரப்பட்டி
மாவட்டம் : திருச்சி
தலசிறப்பு
இக்கோயில் வாயில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய இலிங்கமும் (தாரலிங்கம்), தாமரைப்பூ வடிவில் ஆவுடையாரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையும் அர்த்தமண்டமும் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயில் தற்போது விமானத்தின் தளம் இன்றி காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் விமானத்தின் தளம் செங்கற்களால் கட்டப்பட்டதால் சிதைவுற்றது. இக்கோயில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்த மண்டபத்தில் சோழர்கால உருளைத்தூண்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் முறையே சிற்பங்கள் அமைந்துள்ளன. தாங்குதளத்தில் இராமாயண மற்றும் சிவ வடிவ புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கொடுங்கையின் கீழே பூதவரிகள் ஆடல் பாடலுடன் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள நடனமாதர்கள் இவ்வூரில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இவ்வூரில் நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகவும் சிறப்புடையதாய் இருந்திருக்கிறது என்பதை இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். கோயிலில் தேவக்கோட்டத்தில் முறையே தெற்கில ஆலமர்செல்வனும், மேற்கே திருமாலும், வடக்கே நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் வடக்கில் மகிஷமர்த்தினியும் அமைந்துள்ளனர். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்களும், சிவவடிவங்களும் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கைக்கு கீழே நாற்புறமும் செல்லும் பூதவரிகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல் மங்கையர் காட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆடல் பாடலுடன் பூதகணங்களும் வரிசையாக செல்கின்றன. கோபுரப்பட்டி சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரினை “பாச்சில்“ என்றும், ஊர்ப்பிரிவு “மழநாட்டு ராஜாச்ரய வளநாட்டு பாச்சில்“ என்றும் குறிக்கப்படுகிறது. இக்கோயில் கல்வெட்டினைக் கொண்டு இக்கோயில் கி.பி.975-இல் உத்தமசோழனால் கட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. உத்தமசோழனின் தாயாரும் கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் இக்கோயிலுக்கு நிலை விளக்குகள் கொடையளித்துள்ளார். உத்தமசோழனின் தேவியார் நக்கன் வீரநாராயணியார் இக்கோயிலுக்கு அவனீச்சுவரர் செப்புத் திருமேனியும், உமாபரமேச்சுவரர் செப்புத் திருமேனியும் செய்தளித்துள்ளார். வைகாசி விசாகம் திருநாளுக்கு வகை செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் சதய நட்சத்திரத்தன்று இராஜராஜன் பிறந்த நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், திருவமுதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் இராஜராஜனின் முன்பிறந்த தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் பிறந்த அவிட்டத்தன்று சிறப்பு வழிபாட்டிற்கு வகை செய்யப்பட்டது. இக்கோயில் தஞ்சை பெரியகோயிலில் உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
கோபுரப்பட்டி ஆதிநாயக பெருமாள் கோயில் தரிசனம்
• கோபுரப்பட்டி ஆதிநாயக பெருமாள் கோயில் தரிசன...
கோயில் Google map link
https://maps.app.goo.gl/ziRxwQwKpbT4S...
அமைவிடம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
தமிழ்