பெண்மயிலே பெண்மயிலே நெஞ்சமெல்லாம் உன் புயலே
அருள்செல்வனின் செவிச்செல்வம்
0:00 / 0:00
பெண்மயிலே பெண்மயிலே நெஞ்சமெல்லாம் உன் புயலே
219 просмотров · 4 дня назад
அருள்செல்வனின் செவிச்செல்வம்
703 подписчика
219 просмотров · 4 дня назад
பெண்மயிலே பெண்மயிலே
நெஞ்சமெல்லாம் உன் புயலே
காண வந்தேன் பூங்குயிலே
காத்திருந்தேன் தனிமையிலே
பெண்மயிலே பெண்மயிலே
நெஞ்சமெல்லாம் உன் புயலே
உன் சோகம் என்னைத் தாக்க உன் மேல் ஆசை கொண்டேனே
பெண் வேகும் எண்ணம் எல்லாம் என்னுள் நானும் கண்டேணே
உன் சோகம் என்னைத் தாக்க உன் மேல் ஆசை கொண்டேனே
பெண் வேகும் எண்ணம் எல்லாம் என்னுள் நானும் கண்டேணே
புன்னகை எல்லாம் கண்ணீர் ஆச்சு
கன்னிகை கண்கள் வெண்ணீர் ஆச்சு
உன்னாலே சோகம் கொண்டு சாகும் நெஞ்சம் கண்டேனே
என்னோடு தேகம் தூண்டும் மோகம் தீண்ட நின்றேனே
பெண்மயிலே பெண்மயிலே நெஞ்சமெல்லாம் உன் புயலே
ஒருஜென்மம் போனாலும் மறுஜென்மம் தான் வந்தாலும்
ஓர் உறவாய் உனையே நாடி நிற்கும் எந்தன் உயிரம்மா
ஒருஜென்மம் போனாலும் மறுஜென்மம் தான் வந்தாலும்
ஓர் உறவாய் உனையே நாடி நிற்கும் எந்தன் உயிரம்மா
என்னுயிருடன் உணர்வாய் உள்ளவள் நீயம்மா
என்னுயிருக்கு நீயும் இன்னொரு தாயம்மா........ஆ............. அ............. என்னுயிருடன் உணர்வாய் உள்ளவள் நீயம்மா
என்னுயிருக்கு நீயும் இன்னொரு தாயம்மா
வேருக்கு நீரை ஊற்றி காதல் பயிரை தந்தாயே
நெருப்புக்கு தாரை வார்த்து பூத்த மலரை ஈந்தாயே
பெண்மயிலே பெண்மயிலே
நெஞ்சமெல்லாம் உன் புயலே
காண வந்தேன் பூங்குயிலே
காத்திருந்தேன் தனிமையிலே
பெண்மயிலே பெண்மயிலே
நெஞ்சமெல்லாம் உன் புயலே