Перейти к содержимому

Pachamalai subramaniyaswamy #gobichetipalayam #erode பச்சமலை முருகன் கோயில் கோபிசெட்டிபாளையம் #vlog

vasanth Jack vlogs

0:00 / 0:00

Pachamalai subramaniyaswamy #gobichetipalayam #erode பச்சமலை முருகன் கோயில் கோபிசெட்டிபாளையம் #vlog

718 просмотров · 2 года назад
vasanth Jack vlogs
6,01 тыс. подписчиков
718 просмотров · 2 года назад
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பச்சைமலை (மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (Pachaimalai Arulmigu Subramanyaswamy Temple) ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். பச்சைமலை - பெயர்க்காரணம் தொகு நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம். செய்து சிறிய அளவில் குடமுழுக்கு நடைபெற்றது. விண்ணோரும் மண்ணோரும் போற்றும் வகையில் முருகப்பெருமானுக்கு பசும்பொன்னாலான தேரும், அதற்கு ஒரு பாதுகாப்பு அறையும், தங்கமயில் ஊர்தியும், அடியார்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்டது. வேழமுக வேந்தனுக்கு மரத்தேரும், தேர்த் திருவிழாவிற்கான பலவகை வாகனங்களும் செய்யப்பட்டன. பலவகை பொற்கவசங்களும், வெள்ளிக்கவசங்களும், சிலைகள் பாதுகாப்பாக வைக்க ஒரு பாதுகாப்பு அரணும் கட்டப்பட்டது. ஆனந்தக் கூத்தாடும் எம்பிரானை சிதம்பரம் சென்று தரிசிக்க முடியாததால், அம்பலத்தை பச்சைமலையில் அமைத்துக் காண வேண்டும் என்ற அடிப்படையில் சிவகாமி அம்பாள் உடனுறை சிவசிதம்பர நடராஜபெருமான் எழுந்தருளப்பெற்றார். அவருக்கு மரகதசபை அமைக்க முடிவெடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. வேள்வி மண்டபமும், பல படிக்கட்டு மண்டபங்களும், புதிய வகை மணி மண்டபமும், அடியார்கள் அமுதுண்ணும் இரண்டு நிலைக்கூடமும், கோசாலையும், வரிசைக் கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் குடமுழுக்கைப் போலவே இரண்டே கால் மண்டபத்தில் உத்தம்பட்ச யாக அமைப்பில் 53 வேள்விக்குழி மற்றும் உபச்சார பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவத்திரு.S சோமசுந்தர சிவாச்சாரியார், சிவத்திரு. மணிகண்ட சிவம், சிவத்திரு சக்தி சுப்பிரமணிய சிவம் மற்றும் திருக்கோயில் முறை கொண்ட பழனிச்சாமி, தண்டபாணி இராமநாத சிவாச்சாரியார்கள் மறை ஓதுகின்றனர். பாரியூர் பூசைப் பெருமக்கள் பாடும் தேனினும் இனிய தீந்தமிழிசையான திருமுறையும், திருப்புகழும், கொங்கர்பாளையம் நாதமணி திரு.குப்புசாமி குழுவினரின் மங்கள இசையும். நாட்டியாஞ்சலியும், இறை உணர்த்தும் கச்சேரிகளும், அறிஞர்கள் ஆராயும் கருத்துரைகளும், அடியார்கள் உளம் நிறைய அட்டிட்டலும் நடைபெறுகிறது. ஆதினங்களும், அமைச்சர்களும், தமிழறிஞர்களும், ஆன்றோரும் சான்றோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.. மூலவர் தொகு பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம். ஸ்ரீ ஷண்முகர் தொகு பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா, விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர். கட்டிடக்கலை தொகு பச்சைமலை கோவிலுக்கு வரும் பக்தர்களை ஐந்து நிலை ராஜகோபுரம் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. கோபி நகரை சுற்றி உள்ள ஊர்களில் இருந்தே ராஜ கோபுரத்தை எளிதில் காணலாம். மூலவராகிய பாலமுருகனுக்கு கைகளால் தேய்த்துப் பளபளபாக்கப்பட்ட கருங்கல்லால் கர்ப்பகிரகம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மரகதீஸ்வரர், ஸ்ரீ மரகதாம்பாள், ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ மரகதவெங்கடேச பெருமாள், ஸ்ரீ கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் தனி கருங்கல் சன்னதிகள் உள்ளது. மஹா மண்டபம், வசந்த மண்டபம், சுற்று மண்டபம் என கோவில் கம்பிரமாகத் திகழ்கிறது. பச்சைமலையில் 40 அடி உயர செந்திலாண்டவர் சிலை அமைந்துள்ளது. இது உலகிலேயே பெரிய செந்திலாண்டவர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்கு மேலே வர மலை பாதையும், 181 படிகளை உடைய படித்துறையும் உள்ளது.