Перейти к содержимому

செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

Captain News

0:00 / 0:00

செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

4 708 просмотров · 2 нед. назад
Captain News
346 тыс. подписчиков
4 708 просмотров · 2 нед. назад
விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேமுதிக பொது செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலில் 1 வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பா சிறப்பு கண் சிகிச்சை முகாமினை MLA பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், பின்னர் வகுப்பறைக்கு சென்ற பிரேமலதாவை வாழ்த்தி பாடல் பாடிய மாணவர்களை பார்த்து நான் உங்களை. வா என்று கூறி நீங்கள் அனைவரும் நன்றாக படித்து வாழ்வில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று கூறி வாழ்த்தினார். அதனை தொடர்ந்து 1 வது வார்டில் செயல்பட்டு வரும் அரசு நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார், அப்போது நியாய விலை கட்டிடம் பாழடைந்து இருப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா இட வசதி போதுமானதாக உள்ளதா என்றும் பொருட்கள் தரமானதாக வருகிறதா என்றும் கேட்டறிந்து வாடிக்கையாளர்களுக்கு சர்க்கரை பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார், அப்போது நியாயவிலை கடை கட்டிடத்தில் தமிழக முதல்வர் விஜய் புகைப்படத்தில் சேதம் அடைந்து இருப்பதையும் பார்த்து விட்டு சென்றார். முதல்வர் புகைப்படத்தில் ஏதோ அசுத்தம் பூசியிருக்கும் காட்சி. அதனை தொடர்ந்து விருத்தாசலம் காந்திநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவர்களிடம் இட வசதி குறித்தும், வரும் நோயாளிகளிடம் மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தார் அதனை தொடர்ந்து அரசுப்பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்ற MLA பிரேமலதா மாநில அளவிலான taekwondo போட்டிக்கு தகுதியான 3 மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அவருக்கு பள்ளி மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். படிப்பில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார் கல்வி ஒன்றுதான் முக்கியமான விஷயம் என்றும் அப்போதுதான் நாம் ஒவ்வொருவரும் நாம் சொந்த காலில் நிற்க உதவும் எனக்கும் கேப்டனுக்கும் பெண் குழந்தைகள் இல்லை ஆகையால் நீங்கள் அனைவரும் என் குழந்தைகள் உங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்னிடத்தில் கூறுங்கள் அனைத்து கோரிக்கைகளையும் செய்து தருகிறேன் என்று கூறினார்.