Перейти к содержимому

அபிராமி அந்தாதி வரலாறு | History of Abhirami Andhadhi…

Abirak Stories...

0:00 / 0:00

அபிராமி அந்தாதி வரலாறு | History of Abhirami Andhadhi…

411 просмотров · 12 дней назад
Abirak Stories...
54 подписчика
411 просмотров · 12 дней назад
அபிராமி அந்தாதி பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இந்தப் பதிவில் வழங்கியுள்ளேன். இனி வரும் என் அடுத்தடுத்த பதிவுகளில், அபிராமி அந்தாதியில் உள்ள ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு, அதன் பொருள், விளக்கம் மற்றும் அதில் உள்ள ஆன்மிகச் சிறப்புகளை எளிமையாக விளக்க உள்ளேன். அபிராமி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏 இந்தப் பதிவில் இடம்பெற்ற பாடல்கள். விநாயகர் காப்பு தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகேழும் பெற்ற சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே. பாடல் 78 செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராமவல்லி! அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. பாடல் 79 விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே. பாடல் 80 கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை ஒட்டியவா! என்கண் ஓடியவா! தன்னை உள்ளவண்ணம் காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! ஆட்டியவா! நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.