Перейти к содержимому

Mullai chedi valarpadhu eppadi tamil | Santhana mullai | Nithiyamalli | மாடியில் இப்படி வளருங்கள்

Ponselvi's Terrace Garden

0:00 / 0:00

Mullai chedi valarpadhu eppadi tamil | Santhana mullai | Nithiyamalli | மாடியில் இப்படி வளருங்கள்

42 826 просмотров · 3 года назад
Ponselvi's Terrace Garden
44 тыс. подписчиков
42 826 просмотров · 3 года назад
நித்திய மல்லி செடியை இப்படி வளர்த்தால் நித்தமும் கொத்துக் கொத்தாக பூக்களை அள்ளலாம் தெரியுமா? மல்லி வகைகளில் ஒன்றான நித்தியமல்லி பல வகையான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. மிக மிக வேகமாக வளரும் இந்தச் செடி வகை மிகுந்த வாசனையுள்ள மலர்களை அள்ளி அள்ளிக் கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது வியப்பிற்குரியதாக இருக்கும். அந்த செடி வைத்து இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றாலே அவ்வளவு ஒரு நல்ல மணம் வீச துவங்கும். மனதில் ஒருவிதமான நேர்மறை ஆற்றல்கள் பெருக துவங்கும். தெய்வீக தன்மையுள்ள நித்தியமல்லி செடியை இப்படி வளர்த்து பார்த்தால் அள்ள அள்ள குறையாமல் தினமும் கொத்துக் கொத்தாக பூக்களை பறிக்கலாம்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். நித்தியமல்லி செடியை சந்தன முல்லை என்றும் அழைப்பது உண்டு. சந்தன நிறத்தில் இருக்கும் இந்த முல்லை விரைவாக வாடி விடக்கூடும்! ஆனால் அது இருக்கும் வரை கண்களுக்கு குளிர்ச்சியையும், நாசிக்கு நல்ல நறுமணத்தையும், கூந்தலுக்கு அழகையும் கொடுக்கும். இது எல்லோருடைய வீட்டிலும், எல்லா மண் வகைகளிலும் இயல்பாகவே வேகமாக வளரும். சுலபமாக வீட்டில் வளர்க்கக்கூடிய செடி வகைகளில் இதுவும் ஒன்று. நித்தியமல்லி செடியை அதிகம் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை, சூரிய ஒளியும், காற்றும் போதிய அளவிற்கு இருந்தால் அதுவே தானாகவே வளரும். நல்ல சூரிய ஒளியில் அடர்ந்த நிறத்தைக் கொடுக்கும், நித்திய மல்லி பூ பெரிது பெரிதாக தன் பூக்களையும் கொடுக்கும். தொட்டியில் வைத்து வளர்ப்பதை விட, மண் தரையில் வளர்த்து மொட்டை மாடி வரை கொண்டு சென்று விடுவது அதிகம் பூக்களை கொடுக்க உதவும். செடியை வளர்க்க ஆரம்பிக்கும் பொழுதே தொழு உரம் அல்லது மண் புழு உரம் சேர்த்து மண்ணை வளமாக்க அதன் பிறகு வளர்ப்பது நல்லது. அப்போது தான் எந்த விதமான நோய் தாக்குதலும் இன்றி நித்தியமல்லி செடியானது பச்சை பசேலென்று பசுமையாக வளரும். நித்தியமல்லி செடியை பொறுத்தவரை பெரிதாக உரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வேரழுகல் நோய் வராமலிருக்க அடிக்கடி அதற்கு சிட்ரஸ் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தோல் அல்லது எலுமிச்சை பழ தோல் போன்றவற்றை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி அதனை கொஞ்சமாக கொடுக்கலாம். அல்லது படிக்காரத்தூள் சிறிதளவு சேர்த்து கொடுக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த வகையான உரத்தை கொடுத்தால் பெரிது பெரிதாக கொத்துக் கொத்தாக பூக்களை வாரி வழங்கும். பொதுவாகவே மற்ற செடி வகைகளை விட நித்தியமல்லியானது அதிகமாக பூக்களைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். பூக்களை பறித்ததும் பூக்கள் பூத்த அந்த கிளையை வெட்டி விட வேண்டும். அப்போது தான் புதிய கிளைகள், பக்க கிளைகள் அதிகமாக முளைத்து, பூக்களும் அதிகமாக பூக்கும். இந்த வகையில் நித்தியமல்லி செடியை வளர்த்து பாருங்கள்! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூக்களை நாம் அள்ளலாம். How to grow nithiyamalli in terrace gardan. Santhana mullai | mullai #mullai #trending #flowers #womenempowerment #gardening #gardeningtips #chennai #farming #plants #jasmine #whiteflower #terracegarden #beautiful #green