Kanda Sashti Day 4 I Is that which is yours beyond the power of the Divine?
இயற்கையைத் தேடி
0:00 / 0:00
Kanda Sashti Day 4 I Is that which is yours beyond the power of the Divine?
1 381 просмотр · 9 дн. назад
இயற்கையைத் தேடி
10,8 тыс. подписчиков
1 381 просмотр · 9 дн. назад
குகன் அருளிய முழு செய்தி (Original message from Guhan): https://inpursuittoevolve.blogspot.co...
குகன் அருளால் கந்த சஷ்டி தினம் 4 - அக்டோபர் 2, 2026
இரவு பகலாய் அனைவரும் சிந்தித்த வண்ணமே உள்ள ஓர் விடயம் தனை பற்றியதே இன்றைய வாக்கு. எவருக்கு இல்லை துயரம்? எளியவர், முதியவர், செல்வந்தர் என பாகுபாடின்றி அனைவரையும் ஆட்கொண்டே உள்ளது. இருப்பினும் துன்பம் இல்லாத நிலையினை எய்திட மானுடர்கள் போராடிட வேண்டா. அஃது இத்தருணத்திலும் அனைவரையும் அடைந்திடலாம். எவ்வாறென்றால் நேற்றைய தினமதிலே நீர் சிந்தித்ததின் ஓர் பகுதியினை தொடர்ந்து கண்டிடலாம்.
எங்ஙனம் மனம் அமைதி இல்லாத பிறவற்றினை அறியாமையால் நிஜம் என்று எண்ணி வாடுகிறதோ அதே போன்று தனது தனித்துவத்தினையும் முழுமையாய் அறிந்திடாது வேறொன்றினை சதா எண்ணியவாறே உள்ளது.
அனைத்து உயிர்களும் இறைவனின் பொக்கிஷ அம்சங்கள். இதனை பல தருணங்களில் மனம் ஏற்றிட மறுக்கிறது. வேறொருவரை இறைவனாக காண்பதோ, தன்னையே உள்ளிருக்கும் இறை சக்தியாய் காண்பதோ ஒருவருக்கு ஏன் இயலாததாய் உள்ளது என்றால் இறைவனின் அகண்ட ஆற்றல்களை அறியாததால். The vast spectrum of God's field is seldom realized by humans.
அஃது விசாலமானது மாத்திரமல்ல ஆழமானதும் கூட. அதனுள் இல்லாததென்று ஏதும் இருந்திட கூடுமோ? அவ்வாறென்றால் ஓர் மனிதனுக்குள் வியாபித்திருக்கும் குணங்களும் அம்சங்களும் இறைவனிடத்து இருந்திடாதா? சிந்தியுங்கள். மற்றொருவன் இறைவன் அல்ல என்றால் இறைவனிடம் அல்லாத ஒன்று நிலைத்திடுமா? Can something ever exist that is not in the precincts of God?
இப்பொழுது உங்களது தர்க்கத்தினால் வேறொருவரை தாழ்த்தியோ குறைவாகவோ வெறுப்புடனோ போட்டியுடனோ பார்க்கும் உங்களது மனம் அறியாமையில் உள்ளது என்பதனை உணர்கிறீர்களா? இறைவனாகிய ஒருவர் உங்களுக்கு சங்கடத்தை எவ்வாறு அளித்திட இயலும்? அவரது அறியாமையும் உங்களது அறியாமையும் அல்லவா துன்பத்தை அளித்திடும்? உங்களை மறைத்திருக்கும் அறியாமை திரையே வேறொருவரையும் மறைத்து நிற்கிறது அல்லவா?
அவ்வாறிருக்க இத்திரைகளுடன் ஏன் மோதுகிறாய் மனிதா? அஃது மாயை என்று அறிந்திடாது நிற்பதன் பயன் யாது? உங்களுக்குள் இறை சக்தி ஒன்றினை தனித்துவமாக அமைத்து அதனை வெளிப்படுத்துவது போலவே பிற உயிர்களிடத்தும் தனித்துவம் படைத்த ஆற்றலையும் அம்சங்களையும் அமைத்து அவற்றினை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இச்சிறிய மனம் என்பது 'இது என்னுடையது, அது உன்னுடையது' என்று கூறு போடும் எதுவும் எவருடையதும் அல்ல. இன்றைய தினமதிலே கவனித்திடுங்கள். 'இறைவன் எமது ரூபத்தில் எதனை வெளிப்படுத்துகிறார்?' எதனை 'எமது' என்று அறியாமையில் வாடுகிறீர் என்று.
இறை சக்திக்கு அப்பாற்பட்டதா உங்களது உடைமைகள்?
ஓம் குஹாய நமஹ!
------------------------------------------------------------------------------------------------------
Today’s message is about a matter that everyone ponders day and night.
Who is free from sorrow? It takes hold of everyone without distinction—the impoverished, the elderly, and the wealthy alike. Yet, humans need not struggle to reach a state free from suffering; it can be attained by everyone at this very moment.
How? Let us see by continuing from a portion of what you reflected upon yesterday.
Just as the mind languishes in ignorance, mistaking that which lacks peace for reality, it similarly remains unaware of its own uniqueness and constantly dwells upon something else. All living beings are treasured expressions of the Divine. In many moments, the mind refuses to accept this truth.
Why does a person find it impossible to see another as Divine, or to perceive oneself as the indwelling Divine power? It is because they remain unaware of the boundless power of the Divine. The vast spectrum of God's field is seldom realized by humans. That power is not only vast, but profoundly deep as well.
Could there be anything that does not exist within it? If so, would not the qualities and attributes pervading a human being also exist within the Divine? Reflect upon this. If another person is not Divine, could something exist that does not originate from the Divine? Can something ever exist that is not in the precincts of God?
Now do you realize that your mind—when it looks down upon another, views them as lesser, or looks at them with hatred or rivalry due to your conditioned impressions—is steeped in ignorance? How could one who is Divine inflict distress upon you? Is it not their ignorance and your ignorance that cause suffering? Is it not the very same veil of ignorance obscuring you that also obscures another?
Such being the case, why do you clash with these veils, O human? What is gained by standing there, failing to realize that it is all an illusion?
Just as the Divine power has uniquely embedded its energy within you and manifests through you, so too does it endow other living beings with unique powers and attributes, expressing itself through them. Meanwhile, this small mind partitions everything, declaring, "This is mine, that is yours"—when in truth, nothing belongs to anyone.
Observe this very day: What is the Divine expressing through your form? Are your possessions beyond the domain of the Divine power, for you to suffer in ignorance claiming them as "mine"?
Om Guhaya Namaha!
#kandasashti #கந்தசஷ்டி #chanelledmessages