திருமகள் துதி/நித்தமுனை வேண்டி மனம் நினைப்பதெல்லாம் நீயே /சரஸ்வதி பூயை பாடல்கள்
Kamatchi Creations
0:00 / 0:00
திருமகள் துதி/நித்தமுனை வேண்டி மனம் நினைப்பதெல்லாம் நீயே /சரஸ்வதி பூயை பாடல்கள்
57 просмотров · 19 часов назад
Kamatchi Creations
387 подписчиков
57 просмотров · 19 часов назад
நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ? சுடர்மணியே! திருவே,
மெத்தமயல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், திருவே! 1
உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்! புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப்பூ
மணிக்குள முள்ள சோலைகளும்
அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே!