Перейти к содержимому

நம்மாழ்வார்-திருவாய் மொழி-7-10|உமா ரமேஷ்|Divya Prabandam Nammalvar-Thiruvaimozhi-7-10|Uma RameshBabu

Sol-சொல்

0:00 / 0:00

நம்மாழ்வார்-திருவாய் மொழி-7-10|உமா ரமேஷ்|Divya Prabandam Nammalvar-Thiruvaimozhi-7-10|Uma RameshBabu

299 просмотров · 2 нед. назад
Sol-சொல்
348 подписчиков
299 просмотров · 2 нед. назад
நம்மாழ்வார்-திருவாய் மொழி 7 - 10 | உமா ரமேஷ்பாபு | Divya Prabandam - Nammalvar - Thiruvaimozhi- 7 - 10 | Uma Ramesh Babu | திருவாய் மொழி - 7 - 10 (சாமவேதம்) இன்பம் பயக்க – திருவாறன்விளை சென்று அடிமைச் செய்ய விழைதல் இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை, இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான், அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை, அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும், மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை, மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை, ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும், பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ், நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை, வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த, வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே. மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க, பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும், மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை, உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர், அன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான், என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான், நின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே. நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை, நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன் வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து, வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய், நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான், சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை, ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால், நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று , யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை, மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும், சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை, சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும், சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன, தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை, தேவர்வைகல் தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. திரு. ஜா. ராஜகோபாலன் அவர்களின் விளக்கம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார்களின் அருளி செயல்கள்) பாடல்களை சந்தஸ் (சந்தம்) முறையில் பயிற்றுவித்த குரு அவர்களுக்கும், இந்த பாசுரங்களின் இடம் மற்றும் அதன் அழகியல், நுட்பம், பக்தி சார்ந்த விளக்கமும் அளித்துள்ள குரு திரு. ஜா. ராஜகோபாலன் அவர்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்களையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன். திரு. ஜா. ராஜகோபாலன் பற்றிய தமிழ் விக்கி பக்கம் https://tamil.wiki/wiki/%E0%AE%9C%E0%... உமா ரமேஷ் பாபு