
Идёт прямой эфир
Трансляции Youvio пока не открывает — они идут другим способом доставки, чем обычные видео. Записи завершённых эфиров и остальные ролики работают как всегда.
🔴LIVE: Today Headlines - 08.09.2026 | காலை முக்கிய செய்திகள் | TN Assembly | DMK vs TVK | CM Vijay
В эфиреСейчас смотрят: 1 795 · Трансляция началась 2 часа назад
News18 Tamil Nadu
7,78 млн подписчиков
Сейчас смотрят: 1 795 · Трансляция началась 2 часа назад
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
--------------------------
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடக்கம். வரும் 16ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள்.
------------------------
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிப்பு. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் நீதிமன்ற வழக்கு இருப்பதால் அறிவிப்பு இல்லை.
--------------------
சென்னை நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கன மழை. வில்லிவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் இரவில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல்.
---------------------
சென்னைக்கு குடிநீர் தரும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு. நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழையால் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து.
----------------------
குற்றம் நடந்துவிட்டது என்பதால் மட்டுமே, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது என முதல்வர் விஜய் பேச்சு. தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கிலும் வேறுபாடு இருப்பதாகவும் விளக்கம்.
--------------------
கடந்த ஆட்சியில் 7 புள்ளி ஐந்து சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை Party Fund வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது என முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு. செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றும் சாடல்.
--------------------
Party Fund மூலம் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், அமைச்சராக இருந்த உதயநிதி பயன் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆவணங்களை படித்துக்காட்டிய முதலமைச்சர் விஜய்.
-------------------
முதலமைச்சர் பேசியபோது இடையூறு செய்ததால் திமுகவினர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்.
-----------------
பேரவையில் முதலமைச்சரின் இருக்கைக்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன். எழுந்து நிற்க முயன்ற எம்.எல்.ஏ.வுக்கு கை கொடுத்து உதவிய முதல்வர் விஜய்.
--------------------
முதலமைச்சர் பேச்சை, தாங்கள் அமர்ந்து கொண்டு கேட்டோம், ஆனால் திமுக எம்எல்ஏக்கள் நின்று கொண்டே கேட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு. அவை மாண்பை உடைத்து தரையில் அமர்ந்த திமுகவினரை, தூக்கிவிட்டது தவெகதான் என்றும் பேச்சு.
------------------
சமூக வலைதளங்களில் தவெகவினரும் பெண்களை இழிவாக பேசுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றச்சாட்டு.
தவறு செய்தால் நீக்குவோம் என அமைச்சர் ஆனந்தும், தவெகவினரின் போர்வையில் திமுகவினர் அவதூறாக பேசுவதாக அமைச்சர் நிர்மல்குமாரும் பதில்.
----------------------
பேரவையில் மாற்று தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த தஞ்சாவூர் எம்.எல்.ஏ. விஜய் சரவணன். சிரித்தபடி ரியாக்சன் கொடுத்த முதல்வர் விஜய்.
--------------------
பேரவைக்கு ஒரே மாதிரியான புடவையில் வந்த தவெக பெண் உறுப்பினர்கள். கை சைகை மூலம் சூப்பர் என சொன்ன முதலமைச்சர் விஜய்.
---------------------
அரசுக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை அவமதிப்பதற்காக ‘அறிவுசார் நக்சல்’ என பிரதமர் மோடி அவதூறு வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
🔴LIVE: Today Headlines - 08.09.2026 | காலை முக்கிய செய்திகள் | TN Assembly | DMK vs TVK | CM Vijay | News18 Tamil Nadu
#TodayHeadlines #topheadlinestoday #topnewstoday #CMVijay #byelection2026DateAnnounced #TNRainupdate #ChennaiRain #tnassembly #dmk
08/09/2026 K
Follow Every Breaking Story LIVE
Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8
#News18TamilNadu #TamilNews
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...
• DISCO WITH KS | Discussion With Karthigaic...
• DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...
• Kalam18 | களம்18 | Full Interview Main Pla...
• Local18 Tamil Nadu
• International News | சர்வதேச செய்திகள் | G...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.