crime story full story Tamil Audiobooks online டேனியல் daniyal@gktamilnovels
GK Tamil Novels
0:00 / 0:00
crime story full story Tamil Audiobooks online டேனியல் daniyal@gktamilnovels
7 147 просмотров · 3 г. назад
GK Tamil Novels
10,1 тыс. подписчиков
7 147 просмотров · 3 г. назад
அப்பாவியான டேனியலை அதிரடியாக மாற்றிவிடுகிறது சமூகம். அதில் டேனியல் ஒருவனைக் கொன்றுவிட விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் அவன் அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவனுக்கு மகிழ்ச்சி. ஆனால் இன்ஸ்பெக்டரோ கொலைகாரனைப் பிடித்துவிட்ட பிறகுதான் திருமணம் என்கிறார்.
அடுத்து என்ன நடக்கும்?
ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பிற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத டேனியல் ஓர் உணர்வுப்பூர்வமான க்ரைம் விருந்து.
கதையிலிருந்து
வீட்ல இருந்தா அக்கா எனக்கு சரியான நேரத்தில ஏதாவது சாப்பாடு கொடுப்பா. அக்கா பாவம்.
இருபத்தாறு வயசாகுது. பிளாஸ்டிக் கம்பெனில வேலைக்குப் போகுது.
வீட்ல வரன் பார்த்துட்டிருக்காங்க வர்றவங்க எல்லாம் பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் அவங்க கொடுக்குற லிஸ்ட் எங்களால ஒண்ணும் பண்ண முடியல. ஒவ்வொரு தாட்டியும் அக்காவப் பொண்ணு பார்க்க வரும்போது அன்னிக்கு சாயங்காலம் அப்பா ஒரு ஆஃப் பாட்டில் ஒரு கோழி வாங்கிட்டு வருவார்.
தண்ணியடிப்பார்.
வாய்க்கு வந்தபடி திட்டுவார். யாரைன்னு அவருக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது.
என்னைக் கூப்பிடுவார். அவ்வளவுதான். எல்லாக் கோபமும் என் மேல இறங்கும். அக்காதான் அழுதுட்டே மருந்து போட்டுவிடும்.
நான் ஒருநாள் அப்பாகிட்ட கேட்டுப் பார்த்தேன்.
"அப்பா நான் வேணும்னா படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போகவா?"
"எதுக்கு?"
"அக்கா கல்யாணத்துக்கு நான் உங்களுக்கு உதவியா"
"ஒரு மயிரும் வேணாம். படிச்சு முடிச்சவனே ஆடிட்டிருக்கான். நீ படிப்ப விட்டுட்டு வெறும் பிளஸ் டு வச்சுட்டு வேலைக்குப் போனா என்ன கிடைக்கும்? வர்றவன் கேக்கறான் லட்ச லட்சமா. நீ வேலைக்குப் போய் வர்ற ஆயிரத்த வச்சு ஒண்ணும் புடுங்க முடியாது."
"சரிப்பா"
"ஒழுங்கா படிக்கிற வேலையை கவனி."
"சரிப்பா"
"என் பொண்ணோட கல்யாணம் என்னோட பிரச்னை. தலை இருக்க வால் ஆடக்கூடாது. புரிஞ்சதா?"
"புரிஞ்சதுப்பா"
லைஃப்ல பையனா பொறந்துட்டு அதுவும் குடும்பம் கஷ்டப்படறப்ப ஒண்ணும் பண்ண முடியாம இருக்கிறது அனுபவிச்சாத் தான் புரியும்.
To Read
Amazon KDP India
https://www.amazon.in/dp/B08TVC6VGS?r...
Amazon KDP US
https://www.amazon.com/dp/B08TVC6VGS?...
கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
ஷர்மி (வாசித்தவர்)
#crime
#crimestory
#crimestories
#tamilaudiobook
#tamilaudio
#tamilvoiceover
#gktamilnovels