தமிழ் விடுகதைகள் பகுதி 22 | TAMIL RIDDLES WITH ANSWERS | #quiz @kanaakids #trending
kanaa kids
0:00 / 0:00
தமிழ் விடுகதைகள் பகுதி 22 | TAMIL RIDDLES WITH ANSWERS | #quiz @kanaakids #trending
274 120 просмотров · 2 г. назад
kanaa kids
124 тыс. подписчиков
274 120 просмотров · 2 г. назад
30 விடுகதைகள் - Tamil vidukadhaigal - Part 22 |
Tamil riddles with timer....
Tamil riddles which the viewers can think within 10 secs and guess the answer...ANSWERS WITH PICTURES...SMART QUIZ AND SMART ANSWERS...
1. திடீரென்று வந்த வெளிச்சம் அப்புறம் தொடர்ந்தது கடாப்புடா சத்தம். அது என்ன?
2. ஒருவரை மற்றவர் துரத்தி துரத்திக் காலம் காட்டினார்கள். அவர்கள் யார்?
3. சட்டை இல்லாமலே கை வைத்தவன் தாவுவதில் கெட்டிக்காரன். அவன் யார் ?
4. மேலிருந்தும் வருவான் கீழ் இருந்தும் வருவான்.
அவன் யார் ?
5. கல்லை சுமந்தவன் கரிக்கு ருசியானவன் அவன் யார்?
6. கட்டை போல் இருந்தவன் வெட்டி வெட்டிப் பிழிந்தால் ருசியோ ருசி .அது என்ன ?
7. அறுக்க உதவாத கருக்கு அருவாள் அது என்ன?
8. எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது. அது என்ன?
9. என்னை பார்த்தால் உன்னை காட்டுவேன். நான் யார் ?
10. ஒரு கிணற்றில் ஒரே தவளை. அது என்ன?
11. செம்மண்ணுக்குள்ளே சிவப்பு மனிதன். அவன் யார்?
12. தங்கை தலையிலே பாம்பு. அது என்ன?
13. தச்சர் கொத்தர் செய்யாத தேர். எது?
14. வெள்ளி ரூபாய் துள்ளி விழும் .அது என்ன ?
15. அடி சிவப்பு நடுபச்சை உச்சி வெள்ளை . அந்தக் கதை என்ன?
16. அதோ ஓடுகிறான் ஒருவன் அவன் காலடி தெரியவில்லை. அவன் யார்?
17. அனைவருக்கும் அடங்காதது ஆதவனுக்கு அடங்கும் .அது என்ன?
18. ஆடும் போது சீரும் ஆடி குடத்தில் அடையும். அது என்ன?
19. வீட்டு தோட்டத்திலே மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது. அது என்ன?
20. என் தம்பி சின்னத்தம்பி ஓடியாடி முள் அடைக்கிறான். அவன் யார் ?
21. ஒற்றை காலில் ஆடுவான் ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார் ?
22. கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணை மறைப்பான். அவன் யார்?
23. கல்லிலே காய்க்கும் பூ தண்ணீரில் மலரும் பூ. அது என்ன?
24. காட்டிலே கரும்புச் சோலையிலே வீட்டிலே புது பானையிலே. அது என்ன?
25. காயும் காய்க்கும் பூவும் பூக்கும் ஆனால் இலை இல்லை. அது என்ன ?
26. காலை மாலை நெட்டை மற்ற நேரம் குட்டை. அது என்ன?
27. குண்டு முழி ராஜாவுக்கு குடல் எல்லாம் பல். அது என்ன?
28. கொம்பு காளை இறங்கி வருது பிடிக்க போனால் கொம்பை காணும் .அது என்ன?
29. செய்ததைச் செய்யும் குரங்கும் அல்ல சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. அது என்ன?
30. தங்க மாம்பழத்தை திங்க முடியவில்லை .அது என்ன?
Also watch
-----------------
• தமிழ் விடுகதைகள் பகுதி 21 - NICE RIDDLES...
• 30 தமிழ் விடுகதைகள் | PART-20 | Tamil ridd...
• 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-19) TAMILRI...
• 30 விடுகதைகள் (PART-18) Riddles in TAMIL w...
• 30 விடுகதைகள் 10 விநாடிகள் | (PART-17)Tami...
• 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-16)-Riddles ...
Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...
#riddles
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#PuthirPottiPoluthupokkuUlagam
#30vidukathaigal
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#சிறுவர்விடுகதைகள்
#புதிர்கேள்விகளும்விடைகளும்
#தமிழ்
#விடுகதைகள்
#புதிர்
#arivukalam
#riddleswithanswers
#google
#tamilvidukathai #trendingquiz #trending #trend #riddle #விடுகதை