Перейти к содержимому

நெய்யும் பாலும் தயிரும்கொண்டு

Maha Shankaaran

0:00 / 0:00

நெய்யும் பாலும் தயிரும்கொண்டு

24 413 просмотров · 5 л. назад
Maha Shankaaran
2,62 тыс. подписчиков
24 413 просмотров · 5 л. назад
திருச்சிற்றம்பலம் ஏழாம் திருமுறை திருவோணகாந்தன்தளி பண் :இந்தளம் பாடல் எண் : 1 நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார் கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யி னல்லால் ஐவர் கொண்டிங் காட்ட வாடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியு ளீரே. பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , ` நெய் , பால் , தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்ற தில்லை . அவ்வாறே , உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி , இவ்வுலகத்தில் , புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று , அச்சுழற்சி யாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு , அதனினின்றும் கரையேறும் வழியொன்றனைச் சொல்லியருளீர் . சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொற்கழல் போற்றி! போற்றி !! www.thevaaram.org